'இனி தூக்கமும் பொழுதுபோக்குதான்'- வருகிறது புதிய போக்கிமான் கேம்! | 'Sleeps are going to be entertaining' Pokemon Company announces new game

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (31/05/2019)

கடைசி தொடர்பு:21:40 (31/05/2019)

'இனி தூக்கமும் பொழுதுபோக்குதான்'- வருகிறது புதிய போக்கிமான் கேம்!

சில ஆண்டுகளுக்கு முன்பு, போக்கிமான் பிடிக்கிறேன் என்றுதான் பலரும் தெருக்களில் சுற்றிகொண்டிருந்தனர். அந்த அளவுக்கு வைரல் ஹிட் ஆனது, 'போக்கிமான் கோ' கேம். இதைத் தயாரித்த போக்கிமான் கம்பெனி, அடுத்த கேமை வெளியிடத் தயாராகிவிட்டது. இதற்கு 'போக்கிமான் ஸ்லீப்' எனப் பெயரிட்டுள்ளது. இன்னும் முழுமையாக அறிமுகப்படுத்தப்படவில்லை என்பதால், இதைப் பற்றிய தகவல்கள் முழுவதுமாக கிடைக்கப்பெறவில்லை என்றாலும், ஆடுபவர்களின் தூக்கத்தை இந்த கேம் கண்காணிக்கும் என்பது மட்டும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தூக்கத்தை பொழுதுபோக்காக்கும் போக்கிமான் ஸ்லீப்

அதை அடிப்படையாகக்கொண்டே கேமில் புள்ளிகள் வழங்கப்படும். இதற்காக, இந்த கேமுடன் சிறிய ட்ராக்கரும் தனியாகக் கொடுக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறது போக்கிமான் கம்பெனி. ஏற்கெனவே, ஃபிட்னெஸ் பேண்டு வைத்திருந்தால், அதுவே போதுமானதாக இருக்கக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. "இதன்மூலம் தூக்கத்தையும் பொழுதுபோக்காக்கப்படும்" என்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது இந்த நிறுவனம். 

இன்று பலரும் மொபைல்களில்தான் நாளின் பெரும்பகுதியைக் கழிக்கின்றனர். இதனால் மனஅழுத்தம், சரியான தூக்கமின்மை போன்ற பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். பெரும் டெக் நிறுவனங்கள் அனைத்தும் 'டிஜிட்டல் வெல்பீயிங்'கை மேம்படுத்த பல முயற்சிகள் எடுத்துவருகின்றன. இந்த நேரத்தில், இப்படிச் சரியான தூக்கத்தை வலியுறுத்தும் கேம்கள் மிகவும் ஆரோக்கியமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இது 2020-ல் வெளிவர உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க