`அம்மாவுக்கு பதில் இப்போ அலெக்ஸா' ஹோம்வொர்க் செய்ய உதவும் ஸ்மார்ட்ஸ்பீக்கர்கள்! #VikatanInfographics | How Children Interact With Smart Speakers?

வெளியிடப்பட்ட நேரம்: 17:46 (01/06/2019)

கடைசி தொடர்பு:17:47 (01/06/2019)

`அம்மாவுக்கு பதில் இப்போ அலெக்ஸா' ஹோம்வொர்க் செய்ய உதவும் ஸ்மார்ட்ஸ்பீக்கர்கள்! #VikatanInfographics

சிறுவர்கள் ஸ்மார்ட்ஸ்பீக்கர்களை எதற்காகவெல்லாம் பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?

`அம்மாவுக்கு பதில் இப்போ அலெக்ஸா' ஹோம்வொர்க் செய்ய உதவும் ஸ்மார்ட்ஸ்பீக்கர்கள்! #VikatanInfographics

மீபகாலமாகச் சந்தைக்கு வரும் ஸ்மார்ட் கேட்ஜெட்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதற்கேற்றாற்போல் மக்களும் அவற்றைத் தினசரி பணிகளில் பயன்படுத்தி வாழ்ந்து வருகின்றனர். வீடு, பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, கார் என அன்றாடம் நாம் புழங்கும் எல்லா இடங்களுமே கொஞ்சம் கொஞ்சம் இணையத்தோடு நெருக்கமாகி வருகின்றன. எனவே இங்கெல்லாம் IoT (Internet of Things) கேட்ஜெட்களும் முக்கியப் பங்காற்றுகின்றன. அப்படி அண்மைக்காலமாக அதிகளவில் பயன்படுத்தப்படும் ஒரு கேட்ஜெட், ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள். நம்முடைய கட்டளைகளை நிறைவேற்ற உதவும் வாய்ஸ் அசிஸ்டன்ட்களான இவை, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு விதங்களில் பயன்படுகின்றன.

Speakers

எனவேதான் கூகுள், ஆப்பிள், அமேசான் என முன்னணி டெக் நிறுவனங்கள் அனைத்தும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களிலும், வாய்ஸ் அசிஸ்டன்ட்களிலும் அதிக கவனம் செலுத்துகின்றன. ஆரம்பத்தில் வெளிநாடுகளில் மட்டுமே விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், தற்போது இந்தியாவுக்கும் வந்துவிட்டன. எதிர்பார்த்ததைவிடவும் இவை மக்களிடம் வரவேற்பையும் பெற்றுவிட்டன. காரணம், இவற்றின் எளிமையான பயன்பாடுதான்.

ஸ்மார்ட் ஸ்பீக்கர்

உதாரணமாக அமேசான் அலெக்ஸாவை எடுத்துக்கொண்டால், இதைப் பயன்படுத்த ஒரே ஒரு ஆப் போதும். இதை வைஃபை மூலம் இணைத்துவிட்டால் போதும். நாம் எந்த நேரத்திலும், எந்தவொரு கேள்வியைக் கேட்டாலும் சட்டென நமக்குப் பதில் வந்து விடும். இதற்காக அறையின் எந்த மூலையிலிருந்தும் `அலெக்ஸா' என அழைத்தால் போதும். பதில் சொல்லத் தயாராகிவிடும். இதுநாள் வரை பொம்மைகளையும், விளையாட்டுப் பொருள்களையும் வைத்து விளையாடிய சிறுவர்கள்கூட ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை தங்களுக்கேற்றவாறு பயன்படுத்துகின்றனர். காரணம் சிறுவர்களின் பல்வேறு விதமான கேள்விகளுக்கும் உடனடியாக பதிலளிக்க ஒருவர் கிடைத்து விட்டாரே? அதுவும் கூகுள் போல டைப் கூட செய்யவேண்டாம்.

Kids VS Smart Speakers

இப்படி எதற்காகவெல்லாம் சிறுவர்கள் அதிகம் ஸ்மார்ட்ஸ்பீக்கர்களைப் பயன்படுத்துகிறார்கள் எனப் பார்த்தால், விளையாட மட்டும் பயன்படுத்தாமல், வீட்டுப்பாடங்களுக்கு உதவி செய்யவும், பாடல்கள் கேட்கவும், அலாரம் வைக்கவும் எனப் பல்வேறு தேவைகளுக்கு ஸ்மார்ட் ஸ்பீக்கர்களைப் பயன்படுத்துகிறார்கள். அதிலும் அதிகமாகப் பயன்படுத்துவது பாடல்களைக் கேட்கத்தான். அதாவது சுமார் 55 சதவிகிதம் பாடல்களைக் கேட்க சிறுவர்கள் பயன்படுத்துகின்றனர். அதேபோல் 44 சதவிகிதம் பல்வேறு விதமான கேள்விகளுக்குப் பதில்களைக் கேட்கப் பயன்படுத்துகின்றனர். 40 சதவிகிதம் ஜோக் கேட்கவும், 25 சதவிகிதம் வீட்டுப்பாடங்களுக்கு உதவி செய்யவும் பயன்படுத்துகின்றனர். பலர் அலாரம் வைப்பதற்கும், விளக்குகள் மற்றும் மின்னணு சாதனப் பொருள்களைக் கட்டுப்படுத்தவும் பயன்படுத்துகின்றனர். தற்போதைய டிஜிட்டல் உலகில், ஒருவரைத் தொடர்பு கொள்ளும் முறையும் டிஜிட்டல் மயமாகவே மாறிவிட்டது. இது சிறுவர்களுக்கும் விதிவிலக்கல்ல எனலாம். வீட்டிலிருப்பவர்களை தொடர்புகொள்ள பத்து சதவிகிதமும், வீட்டிற்கு வெளியே இருப்பவர்களைத் தொடர்புகொள்ள 9 சதவிகிதமும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். பலர் கதைகளைக் கேட்கவும், பாட்காஸ்ட் ப்ளே பண்ணவும்கூட இவற்றைப் பயன்படுத்துகின்றனர்.

SMART SPEAKER INFO

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து விதமான வாய்ஸ் அசிஸ்டன்ட்களிலும் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும். அதிலும் குறிப்பாக, இந்தியாவில் பேசப்படும் ஆங்கில முறைகளைப் புரிந்துகொள்வது என்பது சற்று கஷ்டமான சூழ்நிலைதான். இருப்பினும் தற்போது வெளிவரும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் இந்தியர்களின் ஆங்கில உச்சரிப்பையும் எளிதாகப் புரிந்து கொள்ளும் அளவுக்குத் தயாரிக்கப்பட்டு வருகின்றன. எனவே வருங்காலத்தில் இன்னும் இன்னும் ஸ்மார்ட்டாகவிருக்கின்றன இவை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்