1 ஜி.பி டேட்டாவுக்கு 5,229.97 ரூபாய் செலவழிக்கும் நாடு எது தெரியுமா? #VikatanInfographics | India has world’s cheapest mobile data prices

வெளியிடப்பட்ட நேரம்: 19:11 (13/06/2019)

கடைசி தொடர்பு:15:23 (14/06/2019)

1 ஜி.பி டேட்டாவுக்கு 5,229.97 ரூபாய் செலவழிக்கும் நாடு எது தெரியுமா? #VikatanInfographics

இந்தியாவில் 1 ஜி.பி டேட்டாவானது வெறும் 18 ரூபாயிலேயே கிடைக்கிறது. உலகிலேயே குறைந்த கட்டணத்தில் 1 ஜி.பி டேட்டா கிடைப்பது இந்தியாவில் மட்டுமே.

1 ஜி.பி டேட்டாவுக்கு 5,229.97 ரூபாய் செலவழிக்கும் நாடு எது தெரியுமா? #VikatanInfographics

உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடாக விளங்கும் இந்தியாவில் உயர் தொழில்நுட்பங்கள் குறித்து அதிகளவு விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. அதற்கேற்றதுபோல் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் இந்தியா முன்னேறி வருகிறது. ஸ்மார்ட்போன் சந்தையில் அதிக சலுகைகள் கிடைப்பது இந்தியாவில்தான். இதில் பல்வேறு போட்டிகளுடன் பல ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் களமிறங்கியுள்ளன. இதற்கேற்றாற்போல் டேட்டாவின் கட்டணமும் குறைவாக உள்ளது. இந்தியாவின் மக்கள் தொகையில் 40.9 சதவிகிதம் அதாவது சுமார் 56 கோடி பேர் தொடர்ச்சியாக இணையம் பயன்படுத்துகிறார்கள்.

Internet

இந்தியாவின் இணைய வளர்ச்சியானது சமீப காலமாக அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது. அதிலும் முக்கியமாக செல்போன் பயன்படுத்துகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் பல்வேறு நிறுவனங்கள் போட்டி  போட்டுக்கொண்டு பல்வேறு சலுகைகளையும், இணையக் கட்டணத்தையும் குறைத்து வருவதுதான். அதாவது இந்தியாவில் 1 ஜி.பி டேட்டாவானது வெறும் 18 ரூபாயிலேயே கிடைக்கிறது. உலகிலேயே குறைந்த கட்டணத்தில் 1 ஜி.பி டேட்டா கிடைப்பது இந்தியாவில் மட்டுமே. ஆப்பிள் ஐபோன் 7 மொபைல் 37,999 ரூபாய். இந்தியாவின் மிகப்பெரிய வயர்லெஸ் பிராட்பேண்ட் சேவை வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ போன் 1,500 ரூபாய். மக்களின் வசதிக்கேற்ப செல்போன் வாங்கப்பட்டு இணையம் பயன்படுத்துகின்றனர். ஐபோன் வாங்கும் வசதி இல்லாதவர்கள் பலர் குறைந்த விலையில், குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் செல்போனையும், டேட்டாவையும் வாங்கி பயன்படுத்துகின்றனர்.

உலகம் முழுவதும் 438 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். அதில் முதலிடத்தில் இருப்பது சீனா. அதாவது சுமார் 82.9 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். சீனாவை அடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. மூன்றாவது இடத்தில் 29.3 கோடி பயனர்களுடன் அமெரிக்கா உள்ளது. 

இந்தியாவில் குறைந்த கட்டணத்தில் இணையம் கிடைத்தாலும், 5 ஜி.பி அளவுள்ள ஒரு திரைப்படத்தை டவுன்லோடு செய்ய சராசரியாக 2 மணி நேரம் 11 நிமிடம் 33 விநாடி நேரம் ஆகிறது. ஆனால் இணைய வேகத்தில் முதலிடத்தில் சிங்கப்பூர் இருந்தாலும், அங்கு 1 ஜி.பி டேட்டாவின் விலை 5.01 டாலர். இந்திய மதிப்பில் 255.24 ரூபாய். குறைவான விலையில், அதாவது இந்திய மதிப்பில் 40 ரூபாய்க்கும் குறைவான விலையில் 1 ஜி.பி டேட்டாவை பெரும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் கிர்கிஸ்தான் உள்ளது. இங்கு 18.78 ரூபாய்க்கு 1 ஜி.பி டேட்டா கிடைக்கிறது. மூன்றாவது இடத்தில் இருக்கும் கஜகஸ்தானில் 34.08 ரூபாய்க்கு 1 ஜி.பி டேட்டா கிடைக்கிறது. 

டேட்டா

அதேபோல், அதிக விலையில் டேட்டா பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பது ஜிம்பாப்வே. இங்கு 1 ஜி.பி டேட்டாவைப் பெற 75.20 டாலர்கள் செலுத்த வேண்டும். இந்திய மதிப்பில் சுமார் 5,229.97 ரூபாய். ஜிம்பாப்வே-க்கு அடுத்து எக்குவடோரியல் கினி (Equatorial Guinea) உள்ளது. இங்கு 1 ஜி.பி டேட்டா 65.83 டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 4,578.31 ரூபாய். 

சில முக்கிய நாடுகளை எடுத்துக்கொண்டால், அமெரிக்காவில் 860.30 ரூபாய். இங்கிலாந்து 463.19 ரூபாய், சீனாவில் 1 ஜி.பி டேட்டா 688.43 ரூபாய். வளர்ந்து வரும் செல்போன் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப இணைய பயன்பாட்டின் செயல்பாடும் மாறிவருகின்றன. அதற்கேற்றாற்போல், பல்வேறு மாற்றங்களும் நிகழ்ந்து வருகின்றன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்