2 நாளே அதிகம்... காலதாமதம் செய்யாதீங்க! - ட்ராய் சொல்வதும் மொபைல் நிறுவனங்கள் செய்வதும் | TRAI extends the MNP deadline as mobile networks demand

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (14/06/2019)

கடைசி தொடர்பு:20:00 (14/06/2019)

2 நாளே அதிகம்... காலதாமதம் செய்யாதீங்க! - ட்ராய் சொல்வதும் மொபைல் நிறுவனங்கள் செய்வதும்

ட்ராய்

MNP - mobile number portability. நம் மொபைல் எண்ணை மாற்றாமலே ஒரு நெட்வொர்க்கிலிருந்து இன்னொரு நெட்வொர்க்குக்கு மாறுவதை  MNP  என்பார்கள். சில ஆண்டுகளுக்கு முன்புவரை இது இந்தியாவில் சாத்தியமாகாத விஷயம். ஆனால், இப்போது ஒரு வாரம் முதல் 10 நாள்களுக்குள்  மாறிவிடலாம். ஆனால், உலக அளவில் இது சில மணி நேரத்தில் நடக்கும் விஷயம். ட்ராய் இது தொடர்பாக நெட்வொர்க்குகளுக்கு ஒரு கெடு விதித்திருந்தது ட்ராய். அதன்படி, 2 நாள்களுக்குள் மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி நடக்க ஒவ்வொரு நெட்வொர்க்கும் தயாராக வேண்டும் எனக் கேட்டிருந்தது. ஒருவேளை டெலிகாம் சர்க்கிளே மாற வேண்டியிருந்தால் அதற்கு 4 நாள்கள் வரை எடுத்துக்கொள்ளலாம் என்றது ட்ராய். உதாரணத்துக்கு, சென்னை டெலிகாம் சர்க்கிளில் இருப்பவர் சென்னையிலே செய்தால் 2 நாளில் மாறிவிடலாம். அதே எண்ணை டெல்லிக்கு மாற்ற வேண்டுமென்றால் 4 நாள்கள் வரை ஆகலாம் என்றது ட்ராய். 

இப்போது இந்தக் கெடுவை நீட்டிக்கச் சொல்லி மொபைல் நிறுவனங்கள் கேட்டுக்கொண்டதன்படி அதை செப்டம்பர் 30 வரைக்கும் நீட்டித்திருக்கிறது ட்ராய். இன்னும் தங்கள் சிஸ்டம் தயாராகவில்லை; சில காலம் வேண்டுமென்ற வேண்டுகோளை ஏற்று ட்ராய் இதை அறிவித்திருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க