ஆண்ட்ராய்டுக்கான அகில இந்திய வானொலி செயலி அறிமுகம்! | All India Radio Launches Mobile App For Android Users

வெளியிடப்பட்ட நேரம்: 13:04 (06/05/2015)

கடைசி தொடர்பு:13:07 (06/05/2015)

ஆண்ட்ராய்டுக்கான அகில இந்திய வானொலி செயலி அறிமுகம்!

அகில இந்திய வானொலி, ஸ்மார்ட்போன் யுகத்திற்கு ஏற்ப ஆண்ட்ராய்டு போன்களுக்கான செயலியை ( ஆப்ஸ்0 அறிமுகம் செய்துள்ளது.இந்த செயலி மூலம் அகில இந்திய வானொலியில் செய்திகளை படிக்கவும், கேட்கவும் செய்யலாம்.

ஐபோனும், ஆண்ட்ராய்டு போன்களும் பிரபலமாக உள்ள நிலையில் பெரும்பானான சேவைகளை செயலி வடிவில் அணுகுவதையே பயனாளிகள் விரும்புகின்றனர். அதற்கேற்ப பல நிறுவனங்களும் அமைப்புகளும் செயலி அவதாரம் எடுத்து வருகின்றன.

இந்த வரிசையில் 83 ஆண்டு பாரம்பரியம் மிக்க அகில இந்திய வானொலியும் சேர்ந்திருக்கிறது.

'ஆல் இந்தியா ரேடியோ நியூஸ்' எனும் பெயரில் ஆண்ட்ராய்டு போனுக்கான செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய வானொலி வழங்கும் முக்கிய செய்திகளை வாசிக்கலாம். அதன் செய்தி ஒலிபரப்பையும் கேட்டு மகிழலாம்.பிராந்திய செய்திகள் மற்றும் சிறப்பு செய்தி நிகழ்ச்சிகளை இந்த செயலியில் கேட்கலாம்.

கூகுள் பிளேஸ்டோரில் இருந்து இந்த செயலியை டவுண்லோடு செய்து கொள்ளலாம்.; https://play.google.com/store/apps/details?id=com.parsarbharti.airnews&hl=en

- சைபர்சிம்மன்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்