கோவை, மதுரையில் இப்போது ரியல் டைம் டிராஃபிக் அப்டேட்ஸ் - கலக்கும் கூகுள் மேப்ஸ்!

ன்றுமுதல் கூகுள் மேப்ஸ்-ல் கோவை, மதுரை நகரங்களில் டிராஃபிக் நிலவரங்கள் ரியல்-டைமில் தெரியும் என்று கூகுள் இந்தியா தெரிவித்துள்ளது. ஏற்கெனவே ரியல்-டைம் டிராஃபிக் அப்டேட்ஸ் வசதியுள்ள நகரங்கள் தவிர இந்தியா முழுக்க 12 நகரங்களில் இப்போது டிராஃபிக் அப்டேட்ஸை வழங்குகிறது கூகுள். கோவை, மதுரை, இந்தூர், சூரத், லக்னோ, லூதியானா, விசாகப்பட்டினம், நாக்பூர், கொச்சி, கொல்கத்தா, திருவனந்தபுரம், போபால் ஆகிய நகரங்களில் இனி கூகுள் மேப்ஸ் ரியல்-டைம் அப்டேட்ஸ் கிடைக்கும். 


 

இப்போது கூகுள் மேப்ஸில் இந்தியா முழுக்க உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், எக்ஸ்பிரஸ்வே சாலைகளுக்கான டிராஃபிக் அப்டேட்ஸும் அப்-டு-டேட்டாக கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது கூகுள். இந்த வசதி கூகுள் மேப்ஸ்-ன் மொபைல், டெஸ்க்டாப் என 2 வெர்ஷன்களிலும் கிடைக்கும்.


சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் டிராஃபிக் அப்டேட்ஸ் கூகுள் மேப்ஸ்-ல் தெரிகிறதா என்று சோதித்துப் பார்த்தோம்! 


சென்னை ( கூகுள் மேப்ஸ்-ல் ஏற்கெனவே ரியல்-டைம் டிராஃபிக் அப்டேட் கொண்ட நகரம்):
 
எல்.ஐ.சி முதல் தாம்பரம் வரை - வழி: அண்ணா சாலை, ஜிஎஸ்டி சாலை 

 

மதுரை: விளக்குத்தூண் முதல் நேதாஜி ரோடு வரை - வழி: மேற்கு மாசி வீதி 

 

 

கோவை: ப்பணக்கார வீதி முதல் ஒண்டிப்புதூர் வரை வழி - அவினாசி சாலை  

கூகுள் மேப்ஸ் எப்படி? கோவை, மதுரையில் ரியல் - டைம் டிராஃபிக் காட்டுகிறதா? 

 - ர. ராஜா ராமமூர்த்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!