இது எமோஜிக்களின் உலகம் #WorldEmojiDay | It is the Emoji worldkkal #WorldEmojiDay

வெளியிடப்பட்ட நேரம்: 16:12 (17/07/2016)

கடைசி தொடர்பு:16:38 (30/06/2018)

இது எமோஜிக்களின் உலகம் #WorldEmojiDay

 

"கண்ணோடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனு மில" என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிவிட்டார் திருவள்ளுவர். அப்போது இருந்தே வாய்ச் சொற்களுக்கான தேவை என்பது குறைந்து கொண்டு தான் வருகிறது. இப்படி யாராவது கட்டுரை எழுத ஆரம்பித்தாலே, இப்போதெல்லாம் தூக்க மோடுக்கு டீன்ஸ் சென்று விடுகிறார்கள்.

காதலை சொல்ல, வேண்டாம் என மறுக்க, சாப்பிட்டாச்சா என கேட்க, 'மிஸ் யூ'வில் ஆரம்பித்து 'கிஸ் யூ' வரை, எல்லாமே தற்போது எமோஜி மயம் தான். எமோஷன்களுக்கும், வார்த்தைகளுக்கும் எமொஜி என இருந்த நாட்கள் போய், சினிமா புதிர்கள், 'லவ் யூ ஹனி' என எல்லாவற்றிலும் எமொஜி தனது அதிகாரத்தை நிலைப்படுத்தி இருக்கிறது.

எமொஜிகள் வருவதற்கு முன்னர், கீபோர்டில் இருக்கும் குறிகளை வைத்தே ( :-) , ;-) ) குறீயிடு கண்டுபிடித்துக் கொண்டு இருந்தோம். அதற்குப் பிறகு, 2011-ல் தான் மொபைல்களில் பிரபலமானது எமொஜி. இன்று முகத்தின் ரியாக்‌ஷன் எமொஜிகள் மட்டும் 23 இருக்கிறதாம்.

இவை அல்லாது மிருகங்கள், உணவு வகைகள் என எல்லாமே எமொஜி தான். அங்கிகரிக்கப்பட்ட எமொஜிக்கள் மட்டும் 1,851 இருக்கின்றன என்கிறது, யுனிகோட் கன்சோர்ட்டியம். அவ்வளவு ஏன், லண்டனில் இருக்கும் ஒரு உணவகத்தில், மெனு கார்டு முழுக்க எமொஜிக்கள் மட்டும் தான் இருக்குமாம் https://www.instagram.com/p/BH1tAA2gCga/

எல்லாவற்றையும், சினிமாவாக மாற்றும் ஹாலிவுட்டின் கைகளில் இருந்து எமொஜிக்களும் தப்பவில்லை. எமொஜிக்களை வைத்து திரைப்படம் ஒன்றை தயாரித்து வருகிறார்கள்.
ஒவ்வொரு நாடும், எந்த எமொஜியை அதிகம் ட்விட்டரில் பயன்படுத்தி இருக்கிறார்கள் என ஒரு சர்வே எடுத்து இருக்கிறார்கள். இந்தியர்கள் எந்த எமொஜியைத் தெரியுமா அதிகம் பயன்படுத்தி இருக்கிறார்கள்?. வேறென்ன வணக்கம் தான்.

இன்று ஏன், எமொஜி புராணம் என்கிறீர்களா? இன்று உலக எமொஜி தினமாம்!


டிரெண்டிங் @ விகடன்