ஆண்ட்ராய்டில் வெளியானது 'பிரிஸ்மா'!

மொபைல் போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அழகாக ஓவியம் போன்ற புகைப்படங்களாக மாற்றித் தரும் 'பிரிஸ்மா என்னும் செயற்கை அறிவுத்திறன் கொண்ட ஆப், சென்ற மாதம் வெளியானது. சாதாரண புகைப்படங்களை நிஜ  ஓவியம் போன்று மாற்றிக்கொடுப்பதுதான் இதன் சிறப்பு. இது உலகம் முழுவதும் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆப் - ஐ பயன்படுத்தி, எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஆண்ட்ராய்டு ஆப்  ஸ்டோரில் கொட்டிக் கிடக்கும் விதவிதமான ஆப்கள், தங்களுக்கு கிடைக்கவில்லையென்று வருத்தப்பட்டனர்  ஆப் ஸ்டோர் வாசிகள். ஆப்பிள் ஐஓஎஸ் பயன்பாட்டாளர்களுக்குத்தான் இந்த ஆப் சென்ற மாதம் முதலில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, நேற்று 'பிரிஸ்மா' ஆப் அதிகாரபூர்வமாக கூகுள் பிளே ஸ்டோரில்  வெளியிடப்பட்டது. முதல் பதிப்பான இதில்,  36 வகையான பில்டர்ஸ்களுடன், எடிட் செய்யப்பட்ட போட்டோக்களை சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூலில் உடனடியாக பகிர்வதற்குரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.neuralprisma

ஜெ. சாய்ராம் (மாணவர் பத்திரிகையாளர்)
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!