ஐபோன்-7: அறிய வேண்டிய 9 அப்டேட்டுகள்! #iphone 7 updates

                                  

செப்டம்பர் மாதம் 'ஆப்பிள்' பிரியர்களின் வசந்தகாலம் எனலாம். ஆப்பிள் தனது புதிய வெளியீடுகளை இந்த மாதத்தில்தான் வெளியிடும். இந்த ஆண்டு செப்டம்பரின் எதிர்பார்ப்பு, ஐபோன் 7. இதுபற்றி இன்னும் எந்தவித உறுதியான தகவல்களும் வராத நிலையில், அதற்குள்ளேயே கொடிகட்டிப் பறக்கின்றன ஐபோன் செய்திகள். இதுவரைக்கும் தெரிந்த, ஐபோன் 7 பற்றிய அப்டேட்டுகள் இதோ..

1. ஐபோன் 7 ஐ 7, 7 ப்ளஸ் மற்றும் 7 ப்ரோ அல்லது பிரீமியம் என மூன்று மாடல்களில் வெளியிட ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.

2. 4.7 மற்றும் 5.5 இன்ச் என இரண்டு டிஸ்ப்ளே சைஸ்களில் வெளிவருகிறது.

3. இந்த முறை ஐபோனில், டூயல் சிம் வசதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4. 3 GB ரேம் வசதி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் கொண்டிருக்கும்.

5. ஐபோன் 7 மாடலில் இன்டர்னல் மெமரி, 32 ஜி.பி, 64 ஜி.பி மற்றும் 256 ஜி.பி என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கும். மற்ற இரண்டு மாடல்களில் 64 ஜி.பி.,க்கு பதிலாக மெமரி 128 ஜி.பி.,யாக இருக்கும்.

                                   

6. இதுவரைக்கும் மொபைல்களில் இருந்து வந்த 3.5 mm ஆடியோ ஜேக் ஐபோன் 7-ல் இருக்காது எனத் தகவல்கள் வந்துள்ளன. அதற்குப் பதிலாக லைட்னிங் கனெக்டர் வசதி இருக்கும் எனத் தகவல்கள் வருகின்றன.

7. ஐபோன் 7 ப்ரீ-ஆர்டர் செப்டம்பர் 9-ம் தேதி துவங்குகிறது. செப்டம்பர் 16-ம் தேதி ஐபோன் வெளியாகிறது.

8. 1960mAh பேட்டரி திறன் இருக்கும் என்பதால், பேட்டரியின் திறன் மற்றும் ஆயுள் அதிகரிக்கும்.

9. இன்னும் இதன் விலை பற்றி உறுதியான தகவல்கள் வரவில்லை. தோராயமாக குறைந்தபட்ச  விலை 52,000 ஆகவும், டாப் மாடலின் விலை 88,900 ஆகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

-செ.ஜெ.பச்சமுத்து

(மாணவப் பத்திரிகையாளர்)


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!