Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கேட்ஜெட்களை காக்கும் புதிய வாட்டர் ப்ரூஃப் ஸ்பிரே!


ன்று அனைவருடைய கையிலும் ஒரு செல்போன் உள்ளது. நாளுக்கு நாள் புதுப்புது மேம்பாடுகளுடன் செல்போன்கள் வெளிவந்தாலும் அந்த செல்போன்களை தண்ணீரில் இருந்து பாதுகாக்க வேண்டியே உள்ளது. மழையில் நாம் ஜாலியாக நனையலாம் என்று நினைக்கும்போது, அந்தக் கனவைத் தடுப்பதே, பாக்கெட்டில் இருக்கும் செல்போன்கள்தான்! இந்த பிரச்சனைக்கு தீர்வாக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஸ்பிரேயை கண்டுபிடித்துள்ளனர். இந்த ஸ்பிரே செல்போன்மீது ஒரு பாதுகாப்பு பூச்சு போல அமையும். இந்த ஸ்பிரேயின் விசேஷ திறன் என்ன என்றால் தண்ணீருக்கு ஒரு தடுப்பாக இந்த ஸ்பிரே அமையும். இந்த திறன்மூலம் செல்போன்களை தண்ணீரில் இருந்து பாதுகாக்கலாம். விமானங்களை பனி தாக்காதபடி பாதுகாக்கலாம். படகின் மேற்பகுதியை துருப்பிடிக்காமல் பாதுகாக்கலாம்.

இதுகுறித்து ஆஸ்திரேலியா நேஷனல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பி.எச்.டி மாணவர் வில்லியம் வோங் (William Wong) கூறியது, “இதன் மேற்பரப்பு நானோ துகள்களான ஒரு அடுக்கால் ஆனது. அதன்மேல் தண்ணீர் பட்டால் அப்படியே சறுக்கிச் சென்றுவிடும்” என்கிறார். இது குறித்து மூத்த ஆராய்ச்சியாளர் மற்றும் இணை பேராசிரியர் அன்டொனியோ ட்ரிகொலி (Antonio Tricoli) கூறியது, “இந்த புதிய கண்டுபிடிப்பு நாம் திரவங்களை கையாலும் முறையை மாற்றி அமைக்கும். இது உயரமான கட்டிடங்களில் உள்ள சன்னல்களை சுத்தமாக வைக்கும். குளியலறையில் உள்ள கண்ணாடியில் பனி படராமல் பாதுகாக்கும். இந்த முக்கியக் கண்டுபிடிப்பு, பிராக்டிக்கலாக பல இடங்களில் இது பயன்படும்” என்றார்.

இந்த ஸ்பிரே  மூலம் மரம், காகிதம், பிளாஸ்டிக் வகைகள், மண் பொருட்கள் என எதை வேண்டுமானாலும், தண்ணீரில் இருந்து பாதுகாக்கலாம். ஏற்கனவே வாட்டர் ப்ரூஃப் தொழில்நுட்பத்திற்காக பல பூச்சுகள் இருந்தாலும், இது நானோ துகள்கள் கொண்டு தயாரிக்கப்படுவதால் வலிமையாகவும், செலவு குறைவானதாகவும் இருக்கும். அத்துடன் இது நிறமற்றதும் கூட. இதன்மூலம் கேட்ஜெட்கள், கண்ணாடிகள் எனப் பல விஷயங்களை நாம் தண்ணீரில் இருந்து காப்பாற்ற முடியும். ஆனால் செல்போனின் மேற்பரப்பில் நீர் படாமல் மட்டுமே, இது பார்த்துக்கொள்ளும். முழு வாட்டர் ப்ரூஃப்பாக எதனையும் மாற்றாது. 

- முரளி.சு
(மாணவப் பத்திரிகையாளர்)
    

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement