ஸ்மார்ட்போன் போட்டோகிராபி... வாங்க க்ளிக்கலாம்! | Tips for smartphone photography

வெளியிடப்பட்ட நேரம்: 17:58 (03/10/2016)

கடைசி தொடர்பு:10:39 (05/10/2016)

ஸ்மார்ட்போன் போட்டோகிராபி... வாங்க க்ளிக்கலாம்!


நாம வாழ்கைல சந்திக்கிற நிறைய சிச்சுவேஷனை ஃபோட்டோவா எடுத்து வச்சிக்கணும். ஆனால், அந்த நேரம் நம்ம  டிஎஸ்எல்ஆர் கைல இருக்காது. கதவை மூடின கடவுள் தொறந்து வச்ச ஜன்னல் தான் ஸ்மார்ட்ஃபோன். ஸ்மார்ட்போன் அந்த அழகான நிமிஷத்தை நம்ம கண் முன்னாடி கொண்டு வந்து நிப்பாட்டும். அதுவே பாக்க கொஞ்சம் நல்ல இருந்தா?...அண்டு த நேம் இஸ் ஸ்மார்ட்போன் போட்டோகிராபி!

ஸ்மார்ட்போன் போட்டோகிராபிக்கு சில ஈசியான ரூல்ஸ் இருக்கு ப்ரோ!

1.நம்ம போன் பின்னாடி லென்ஸ் அழுக்கு ஆகி இருந்தா போட்டோ  போகஸ்  பிராப்ளம் வரும். அதனால அத சின்ன துணி வச்சி அப்ப அப்ப துடைச்சி கிளின் செய்யனும். பைக்கையே பண்ண மாட்டேன் ப்ரோன்னு சொல்லாதீங்க. நகம் கடிக்கிற நேரத்துல செஞ்சிடுலாம் பாஸ்.

2.மொபைல்ல இருக்க Full resolution நாம யுஸ் பண்றது இல்ல. டிஃபால்டுலயே விட்டுறோம்.இத சரி செஞ்சி நம்ம மொபைல் எவ்வளவு மெகா பிக்சலோ சப்போர்ட் பண்ணுமோ அத செட் செஞ்சி வைக்கனும். மெமரி காலி ஆகும்தான். ஆனால் “மெமரியில் குமரியை தனிச்சிறை பிடிப்பேன்”ன்னு மதன் கார்க்கியே எழுதியிருக்கார் ப்ரோ. அப்புறம் உங்க இஷ்டம்.

3.போன் கேமரால இருக்கற கலர் எஃபக்ட்ஸ் செபியா,கிரேஸ்கேல் இந்த மாதிரி இருக்கறதலாம் எடுத்துடுங்க. இது நம்ம போட்டோவோட தனித்தன்மையை குறைச்சிடும். தனியா கலர் கரெக்‌ஷன் பண்ணிக்கலாம்.

4.நம்ம கண் நேரத்துக்கு ஏத்த மாதிரி குறிப்பிட்ட வெளிச்சத்த மட்டும்தான் உள்ள அனுப்பும். அந்த மாதிரி தான் கேமராவும்,நாம இந்த வெளிச்சத்த கட்டு படுத்த எக்ஸ்போசர் வேல்யுவ பயன்படுத்தலாம், இப்ப வர ஸ்மார்ட்போன் கேமரால ISO வந்துடுச்சி. இந்த செட்டிங்லாம் யுஸ் பண்ணி பார்க்கலாம். நம் ஃபோன் நம் உரிமை பாஸ்.

5.வெளிச்சம் இல்லாத இடத்தில வேற எக்ஸ்ட்ரா லைட் எதாவது வச்சிகனும். பேக் கிரவின்டு அதிக வெளிச்சமா இருந்தா சப்ஐக்ட் எக்ஸ்போஷர் வெளிச்சம் கம்மி ஆகிடும். இத முடிச்ச அளவு தவிர்க்கணும். 

 

6.எல்லா ஸ்மார்ட்போன்னும் வைட் லென்ஸ்தான். இதனால கேமரா எல்லா இடத்தையும்தான் போகஸ் செய்யும். குறிப்பிட்ட இடத்தை போகஸ் செய்ய டிரை பண்ண வேண்டாம். வைடே நிறைய இடத்துல நல்லது. நாம என்ன கிரிக்கெட்டா ஆடுறோம்? இங்க, வைடு நல்லது.

7.எந்த போட்டோ எடுத்தாலும் பக்கத்துல போய் அதோட டிடெய்ல் கேப்ச்சர் பண்ணுங்க. மொபைல்ல மேனுவல் ஜும் பண்ணாதீங்க. இது போட்டோ தரத்தை குறைக்கும். 

8.போட்டோ கம்போஸ் பண்ணும் போது நிறைய எலிமன்ட்ஸ் இல்லாம மினிமல்லா கம்போஸ்ங் பண்ண டிரை பண்ணுங்க. இது சப்ஜெக்ட வேல்யூவ அதிகபடுத்தும். 

9.எப்பவும் ரூல்ஸ் பாலோ பண்ண வேணாம். இருந்தாலும் எந்த ஓரு சப்ஜெக்டையும் நடுவுல வச்சி கம்போஸ் பண்ணாதீங்க. யாரும் பாக்காத ஓரு கோணத்துல வச்சி எடுத்து பாருங்க. அதுவே ஃபோட்டோவை அழகாக்கிடும்.

பின்குறிப்பு: இதை வச்சி அஞ்சு போட்டோ எடுத்துட்டு நாலு பேத்துக்கு நீங்களும் இப்படி அட்வைஸ் செய்யலாம்!நோ ப்ராப்ஸ்!

- க.மணிவண்ணன் (மாணவப் பத்திரிக்கையாளர்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்