வெளியிடப்பட்ட நேரம்: 17:39 (27/10/2016)

கடைசி தொடர்பு:18:00 (27/10/2016)

புதிய பிளாக்பெர்ரி DTEK 60 மொபைலின் சிறப்பம்சங்கள்!

                   

டந்த சில வருடங்களாக ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டின் வருகையால் மொபைல் சந்தையில் தன்னுடைய இடத்தினை இழந்தது பிளாக்பெர்ரி . இதனால் ஸ்மார்ட்போன்கள் உற்பத்தியை நிறுத்துவதாக சமீபத்தில் அந்நிறுவனம் அறிவித்தது. இந்த பிளாக்பெர்ரி நிறுவனம் மொபைல் சந்தையில் பல ஆண்டுகளாக முன்னனியில் இருந்த நிறுவனம். அதற்குக் காரணம், பாதுகாப்பில் பெயர் பெற்று சிறந்து விளங்கியதுதான். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் பிளாக்பெர்ரி DTEK 50 என்ற ஆண்ட்ராய்டு போனை வெளியிட்டது. அத்துடன் தனது தயாரிப்பினை நிறுத்திவிட்டு பாதுகாப்பு மென்பொருள் தயாரிப்பில் ஈடுபடப்போவதாக அறிவித்தது. ஆனால், மீண்டும் பிளாக்பெர்ரி நிறுவனம் DTEK 60 என்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

                       
     இந்த ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் டிஸ்பிளே, 1440 x 2560 பிக்சல் ரெசல்யூசன் இன்-செல் டிஸ்பிளே என அகலமான டிஸ்பிளேயை கொண்டுள்ளது. ஸ்னாப்ட்ராகன் 820 ப்ராசஸசர், 32 ஜி.பி மெமரி, கைரேகை மூலம் இயங்கும் சென்சார்வசதி ஆகியவற்றை கொண்டுள்ளது.  இந்த போன் 4G VoLTE தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது. தற்போதைய ஸ்மார்ட்போனில் ரேம்-க்கு அடுத்தபடியாக கேமராக்கள்தான் அதிகமானோரின் கவனத்தை ஈர்க்கும். கேமரா பிரியர்களுக்கு ஏற்ற வகையில் பின்பக்க கேமரா 21 இன்ச் மெகாபிக்சல், 8 இன்ச் மெகாபிக்சல் முன்பக்க கேமரா மற்றும் இரண்டு பிளாஷ் லைட்டுகள் என அசத்தலாக வெளிவந்துள்ளது. இதன் பேட்டரி திறன் 3,000 mAh திறனை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வழக்கம்போல DTEK 50 மொபைலை போலவே ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ 6.0 இயங்குதளத்தினை கொண்டுள்ளது. ஆனால் DTEK 50 விட கூடுதல் வசதிகள் DTEK 60 -ல் உள்ளது. மற்றபடி ஸ்மார்ட்போனுக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டு அட்டகாசமாக வெளிவந்துள்ளது. இனிமேலும் மொபைல் சந்தையில் தன்னுடைய பொருட்களைத் தொடர்ந்து அவுட்சோர்சிங் முறையில் தயாரிக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை 499 டாலராக இருக்கிறது. 165 கிராம் எடை, 6.06 மி.மீ. தடிமன், டிசைன் என அசத்தும் DTEK 60, கேமரா பிரியர்களுக்கு நல்ல சாய்ஸ்!


-துரை.நாகராஜன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்