மொபைல் வாலட்ஸ்: பத்திரமாக கையாள 6 டிப்ஸ்! #WalletSafety | Security Tips to Follow when Using mobile Wallets

வெளியிடப்பட்ட நேரம்: 17:44 (31/10/2016)

கடைசி தொடர்பு:17:44 (31/10/2016)

மொபைல் வாலட்ஸ்: பத்திரமாக கையாள 6 டிப்ஸ்! #WalletSafety

டைகளில் பணம் கொடுத்து பொருள் வாங்கிய நிலையை, கிரெடிட் கார்டுகளும், டெபிட் கார்டுகளும் மாற்றின. ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் முளைத்ததும் அதற்கும் ஈடு கொடுத்தன இந்த கார்டுகள். ஆனால் அதைவிடவும் பணம் செலுத்தும் சேவையை எளிதாக்கின புதிதாக வந்த இ-வாலட் எனப்படும் மொபைல் வாலட்கள். சினிமா, டாக்ஸி, ஷாப்பிங், ரீசார்ஜ் என எங்கும் சில நொடிகளில் பணம் செலுத்த உதவியதாலும், சலுகைகளை அதிகம் வழங்குவதாலும் அதிக வரவேற்பு பெற்றது. இன்று பலரும் இந்த சேவையை பயன்படுத்துகின்றனர். இதைப் பயன்படுத்தும் போது, நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய சில டிப்ஸ்கள் இதோ..

சரியான நிறுவனத்தை தேர்ந்தெடுங்கள்!

இ-வாலட் சேவையை வழங்க நிறைய நிறுவனங்கள் இருக்கின்றன. இதற்கென பிரத்யேக சேவை நிறுவனங்கள், வங்கிகள், டெலிகாம் நிறுவனங்கள் என பல ஆப்ஷன்கள் இருக்கின்றன. இவற்றில் நம்பத்தகுந்த, பாதுகாப்பான நிறுவனங்களின் சேவையை மட்டுமே பயன்படுத்துவது நல்லது. அதேபோல நிறைய இ-வாலட் சேவைகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தாமல், ஒரு சேவையை மட்டுமே அனைத்துக்கும் பயன்படுத்தலாம்.

உங்களுக்கு ஏற்றதை தேர்வு செய்யுங்கள்!

பாதுகாப்பான சேவை மட்டுமின்றி, உங்களுக்கு பொருத்தமான சேவையையும் நீங்கள் பயன்படுத்துவது லாபகரமாக அமையும். குறிப்பாக நீங்கள் அதிகம் சினிமா டிக்கெட் புக் செய்ய, டாக்ஸி புக் செய்யவோ மட்டும் இந்த சேவைகளை பயன்படுத்தலாம். அப்படியெனில்  எந்த இ-வாலட்  நிறுவனம் அதிகம், இந்த விஷயங்களுக்கு தள்ளுபடி, கேஷ்பேக் போன்ற சலுகைகளை  அதிகம் வழங்குகிறதோ அவற்றிற்கு நீங்கள் டிக் அடிக்கலாம். நீங்கள் அதிகம் பயன்படுத்தும் சேவைகளில் எந்த இ-வாலட் நிறுவனத்தின் சேவை சிறப்பாக இருக்கிறது என்பதைப் பொறுத்து இதனை முடிவு செய்யலாம்.

உங்கள் மொபைல் பாதுகாப்பு முக்கியம்:

உங்கள் இ-வாலட் இருப்பது உங்கள் மொபைலில்தான் என்பதால், அதற்கும் கூடுதல் பாதுகாப்பு தேவை. எனவே உங்கள் மொபைலை லாக் செய்து பாதுகாப்பாக வைத்திருங்கள்.

இலவச வைஃபை:

இ-வாலட் சேவைகளை சொந்த டேட்டாவில் பயன்படுத்தினால் பிரச்னை இல்லை. ஆனால் பொது இடங்களில் கிடைக்கும் இலவச வைஃபைகளில் பயன்படுத்தும் போது, அதிக கவனம் தேவை. நீங்கள் பயன்படுத்தும் வைஃபை, பாதுகாப்பானதா என உறுதி செய்து கொள்ளுங்கள். முடிந்தவரை இது போன்ற பொது வைஃபை வசதிகளை தவிர்ப்பது நலம். ஏனெனில் மூன்றாம் நபர் உங்கள் இரகசியங்களை திருட வாய்ப்புண்டு.

நம்பிக்கையான சேவைகளுடன் மட்டும் இணைக்கவும்:

உங்கள் இ-வாலட்டை நீங்கள் பணம் செலுத்தும் பல இடங்களில், பல ஆப்ஸ்களில் இணைத்துக் கொள்ள முடியும். இதனால், ஒவ்வொரு முறையும் பாஸ்வேர்டு கொடுப்பதற்கு பதில், நேரடியாக பணம் செலுத்த முடியும். இது எளிதான வசதி என்றாலும் கூட, இதனை எல்லா இடங்களிலும் பயன்படுத்தாதீர்கள். எந்த சேவையை அதிகம் பயன்படுத்துகிறீர்களோ, அதில் மட்டும் உங்கள் இ-வாலட் சேவையை இணைத்துக் கொள்வது பாதுகாப்பானது.

பாதுகாப்பு உங்கள் கையில்!

மொபைல் வாலட்களின் பாதுகாப்பில், சேவை நிறுவனங்களில் பங்கை விடவும் அதனைப் பயன்படுத்தும் உங்களின் பங்கு அதிகம் இருக்கிறது. ஒன் டைம் பாஸ்வேர்டுகளை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது, வலுவான பாஸ்வேர்டுகளை அமைப்பது என உஷாராக இருப்பது மொபைல் வாலட்டின் பாதுகாப்பிற்கு நல்லது.

- ஞா.சுதாகர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்