வெளியிடப்பட்ட நேரம்: 09:32 (04/11/2016)

கடைசி தொடர்பு:10:18 (04/11/2016)

ஃபேஸ்புக் லைவ் வீடியோவால் மீண்டும் லட்சக்கணக்கானோர் ஏமாற்றம்

ஃபேஸ்புக்கில் அவ்வப்போது சில பேஜ்கள் லைவ் வீடியோக்கள் என்ற பெயரில் பழைய வீடியோக்களை லூப் செய்து ஓட விடுகின்றன. சில மாதங்களுக்கு விண்வெளியில் விண்வெளி வீரர்கள் நடக்கும் வீடியோ சில ஃபேஸ்புக் பக்கங்களில் லைவ்வாக காட்டப்பட்டது. ஆனால், அவை பழைய வீடியோக்கள் என அப்போதே நிரூபிக்கப்பட்டு சர்ச்சையானது. 

இந்நிலையில், நேற்று பல பேஜ்களில் 1,999 அடி உயர டவரில் பல்ப் மாற்றும் வீடியோ ஒன்று லைவ்வாக ஓடியது. உண்மையில், இது பழைய வீடியோவாம். லைவ் வீடியோக்களால் லைக்ஸ், ஷேர்ஸ் அள்ள முடியும் என்ற ட்ரிக்கை வைத்துக்கொண்டு பல ஃபேஸ்புக் பக்கங்கள் இப்படி மக்களை ஏமாற்றுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க