லீக்கானது நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன் படங்கள்!

நோக்கியா நிறுவனம் விரைவில் வெளியிட உள்ள ஸ்மார்ட் ஃபோன்களின் படங்கள் லீக் ஆகியுள்ளது. மொபைல் ஃபோன் விற்பனையில் முன்பு ஆதிக்கம் செலுத்தி வந்த நோக்கியா நிறுவனம் ஆண்ட்ராய்டு ஃபோன்கள் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதன் படங்கள் இணையதளங்களில் லீக் ஆகியுள்ளன. அதன்படி, D1C என்ற ஆண்ட்ராய்டு டேப்லட்களின் படங்கள் லீக் ஆகியுள்ளன. இவற்றில் ஹைரேஞ் ஃபோன் ஒன்றும், மிட்ரேஞ் ஃபோன் ஒன்றின் படமும் வெளியாகியுள்ளது. குறிப்பாக இதில் ஹைரேஞ் ஃபோன் 3 ஜி.பி ரேம், 22.6 எம்.பி. ரியர் கேமரா, 4K வீடியோ சப்போர்ட்,   32 ஜி.பி இன்டர்நெல் மெமரி, 4 ஜி டேட்டாவுடன் வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் ஹைரேஞ் ஃபோன் ரூ 30,000-க்கும், மிட் ரேஞ் ஃ போன் ரூ.20,000.க்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!