நோட்-7 மாடலைத் தொடர்ந்து வெடித்து சிதறியது சாம்சங் கேலக்ஸி J5

சாம்சங் நோட்-7 மாடல் வெடித்துச் சிதறிய பிரச்னை ஓய்வதற்குள் அடுத்த பிரச்னை எழுந்துள்ளது. இம்முறை அதன் கேலக்ஸி J5 மாடல் ஃபோனும் வெடித்துள்ளது. பிரான்ஸில் பெண் ஒருவரின்  J5 மாடல் வெடித்ததாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக லம்யா என்ற அந்த பெண் கூறுகையில், "எனது 4 வயது குழந்தை மொபைலை பயன்படுத்திக் கொண்டிருந்தபோது அந்த ஃபோன் சூடாகியது. இதையடுத்து, நான் அந்த ஃபோனை வாங்கி பார்த்தபோது அதில் இருந்து புகை வந்தது. உடனே, நான் ஃபோனை தூக்கி வீசிவிட்டேன். அப்போது ஃபோன் வெடித்தது" என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து சாம்சங் கூறுகையில், "இதுதொடர்பாக அந்த வாடிக்கையாளரிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை. மேலும், அந்த ஃபோனை ஆய்வு செய்த பிறகுதான் இதுகுறித்து விசாரணை நடத்த முடியும்" என்று கூறியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!