வெளியிடப்பட்ட நேரம்: 12:01 (17/11/2016)

கடைசி தொடர்பு:12:04 (17/11/2016)

ஒரு பல்பை எரிய வைக்கும் மின்திறனில் நொடிக்கு 20 ஜிபி இணைய‌ வேகம்!

20 ஜிபி

ஒரே ஒரு பல்பை எரிய வைக்க தேவைப்படும் மின் திறனை பயன்படுத்தி 20 ஜிபி இணைய வேகத்தை தர முடியும் என்றால் நம்புவீர்களா? ஆனால் அதனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது ஃபேஸ்புக்.   அக்யூலா ட்ரோன்கள் மூலம் உலகில் இணையம் மூலம் இணைக்க முடியாத இடங்களை இணைக்கும் முயற்சியை மேற்கொள்ளும் ஃபேஸ்புக் நிறுவனம் அது தொடர்பான அப்டேட்டை வெளியிட்டுள்ளது. 

ஃபேஸ்புக்கின் சிஇஓ  மார்க் சக்கர்பெர்க், தனது பக்கத்தில் அக்யூலா மூலம் விமானங்களை நிறுவி இனைய சேவை வழங்கும்  திட்டத்தின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதில் தனது கனெக்டிவிட்டி லேப் அணி நொடிக்கு 20 ஜிபி இணையவேகத்தில் 13 கி.மீ தூரத்துக்கு இணைய சேவையை வழங்கும் பணியை சோதித்து வெற்றி பெற்றுள்ளது. இதற்கு ஒரு பல்பை எரிய வைக்க தேவையான மின் திறனே தேவைப்படுகிறது. விரைவில் இது சோலார் தொழில்நுட்பத்துக்கு மாற்றப்பட்டு உலகின் இணைய சேவை இல்லா பகுதிகளுக்கு இணைய சேவையை வழங்கவுள்ளோம் என்று அறிவித்திருந்தார்.

 

 

 

மேலும் ஃபேஸ்புக் உலக மக்கள் இணைக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயல்படுகிறது. அதற்காக தான் இந்த திட்டங்கள் உலகின் எந்த பகுதியில் உள்ள மக்களும் இணையம் இன்றி இருக்க கூடாது. ஒரு இணையம் ஒரு தலைமுறைக்கு தேவையான அனைத்து தகவல்களைகளையும் நொடிப்பொழுதில் தந்துவிடும். இதனால் கல்வி, மருத்துவம் போன்ற விஷயங்கள் அனைவரையும் சென்றடையும் என கூறியிருந்தது.

ஃபேஸ்புக் ஃப்ரி பேசிக்ஸ் திட்டம் இந்தியா போன்ற நாடுகளில் அனுமதி மறுக்கப்பட்டாலும், உலகின் மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லும் எண்ணத்தில் வேகமாக செயல்பட்டு வருகிறது. 

- ச.ஸ்ரீராம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்