வெளியிடப்பட்ட நேரம்: 22:46 (21/11/2016)

கடைசி தொடர்பு:10:12 (22/11/2016)

ஸ்மார்ட் போன்களுக்கு எதிராக ஆன்டி ஸ்மார்ட் போனை களமிறக்கும் சீனா!

 

ஸ்மார்ட் போன்களுக்கு எதிராக சீன நிறுவனம் ஒன்று 'லைட் போன்' என்ற ஆன்டி ஸ்மார்ட் போன் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. ஸ்மார்ட் போன்களுக்கு எதிராக ஒரு ஏ. டி. எம் கார்ட் அளவில் வெள்ளை நிறத்தில் இருக்கும் போன் நவம்பர் 30-ம் தேதி வெளியாகவுள்ளது. முக்கியமாக இதில் 2ஜி நானோ சிம் மட்டுமே பயன்படுத்த முடியுமாம். இந்திய மதிப்பில் ரூ.7,000-க்கு இந்த போனின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போனில் கேமரா இல்லை. இதில் இன்டர்நெட்டும் பயன்படுத்த முடியாது. ஆனால் ஒருமுறை சார்ஜ் செய்தால், கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு பேட்டரி நீடிக்கும் என்று சொல்கின்றனர். தற்போது இதை மற்ற நாடுகளுக்கு சந்தைப்படுத்துவதில் சற்று தாமதமாகிறது. இதற்கு அந்நிறுவனம்' ஜனவரிக்‌குள் அனைத்து நாடுகளிலும் இதன் விற்பனை தொடங்கப்படும்' என்று கூறியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க