ஐபோன் 8 ஸ்மார்ட்போனில் 3D கேமரா

சமீபத்தில் நடந்த 2.0 பர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழாவில், '2.0 படமெடுக்கும் போதே 3டி கேமரா கொண்டு கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறோம்' என்றார் இயக்குநர் ஷங்கர். ஆனால் இனிவரும் காலங்களில் 3டி படங்களை செல்போனிலேயே எளிதாக படம் பிடிக்கலாம். அதற்கான முயற்சியில் தற்போது இறங்கியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.

செல்போனில் 3டி!

திரையில் 3டி பார்த்து மகிழ்ந்தது போய் நாமே 3டி புகைப்படங்களும் வீடியோக்களுக்கும் எடுக்கலாம் என்ற எண்ணத்தில் தோன்றியவைதான் டூயல் கேமிராக்கள்.ஹெச்.டி.சி 1 போன்ற போன்களில் உள்ள டூயல் கேமராக்கள் எடுக்கும் புகைப்படங்கள் சற்றேறக்குறைய 3டி என்றாலும் முழுமையான் 3டி அல்ல!

ஆப்பிள்-எல்.ஜி கூட்டணி?

தற்போது அதேபோன்ற டூயல் கேமராவை ஆப்பிள் நிறுவனம் தன் ஐபோன் 7+ல் பயன்படுத்தியுள்ளது.அந்த கேமராக்களை எல்.ஜி தான் சப்ளை செய்து வருகிறது. இந்நிறுவனங்கள் கூட்டு முயற்சியாக முழுமையான 3டி கேமராக்கள் உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளன.

2017ம் ஆண்டு இறுதியில் ஆப்பிளின் ஐபோன் 8 ஸ்மார்ட்போன் வெளியாகவிருக்கிறது.. இதில் 3D கேமராவை சேர்க்க ஆப்பிள் முயன்று வருவதாக கொரியா ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. LG நிறுவனத்திடம் உள்ள 3D கேமரா தொழில்நுட்பத்தை ஆப்பிள் ஐபோன் 8-ல் சேர்க்க விரும்புகிறதாம். ஐபோன் 8-ல் 3D டச் சென்சார் ஸ்க்ரீனிலேயே இருக்குமாம்.

மேலும், அதிவேகமான A11 ஃப்யூஷன் ப்ராசஸர், மூன்று ஸ்க்ரீன் சைஸ் ஆப்ஷன்கள், Always on Display என நிறைய வசதிகள் ஐபோன் 8-ல் சேர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது

-ரா.கலைச்செல்வன்
மாணவப் பத்திரிகையாளர் 2016

Do you like the story?

Please Appreciate the Author by clapping!