விஎல்சி 3.0-வில் என்ன அறிமுகமாகப்போகிறது தெரியுமா? #VLC3.0

விஎல்சி வீடியோ ப்ளேயரை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எந்த ஒரு கணினியிலும் அதன் இயங்குதளத்தில் தரப்பட்டிருக்கும் வீடியோ ப்ளேயரை தாண்டி இடம் பிடிப்பது விஎல்சி ப்ளேயராகத் தான் இருக்கும். பெரும்பாலான பயன்பாட்டாளர்களுக்கு பிடித்த இந்த ப்ளேயர் தனது புதிய வெர்ஷனான 3.0-வை இந்த ஆண்டின் இறுதியில் வெளியிடவுள்ளது. 

இந்த விஎல்சி வீடியோ ப்ளேயரில் புதிய அப்டேட் என்னவென்றால் இது முதல் முறையாக ஒரு விடியோ ப்ளேயர் ஆப்பில் 360 டிகிரி வீடியோ சேவை வழங்கப்படவுள்ளது. இதன் முன்னோட்ட வெர்ஷன் ஒரு சில விண்டோஸ் மற்றும் மேக் தளங்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் வெளியாக உள்ள இந்த வெர்ஷன் புதிய மேம்படுத்தப்பட்ட தரத்துடன் வெளியாகவுள்ளது.

கிரோப்டிக் உதவியுடன் இந்த சேவையை விஎல்சி, அனைத்து இயங்கு தளங்களிலும் வீடியோவை புதிய பரிமாணத்தில் வழங்கவுள்ளது. இதுவரை உள்ள வீடியோ ப்ளேயர்களில் 360 டிகிரி வசதி எதிலும் இடம்பெறவில்லை. இந்த வெர்ஷனில் தான் முதன் முதலில் அறிமுகமாகிறது. 

360 டிகிரி வீடியோ தவிர இந்த வெர்ஷனில் 360 டிகிரி பனோரமா புகைப்படங்களை ப்ளே செய்யும் வசதி, கணினியின் கீ-போர்டால் கன்ட்ரோல் செய்யும் வசதி, நேரடி 3-டி உள்ளிட்ட வசதிகளும் இடம்பெற்றுள்ளன. 

விஎல்சி

இந்த வசதிகள் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தும் என விஎல்சியுடன் இணைந்து செயலாற்றும் க்ரோப்டிக் நிறுவன சிஇஓ கூறியுள்ளார். இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் அனைத்து இயங்குதளங்களிலும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற வருடம் முதலே இந்த அப்டேட் பற்றிய பல செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. இந்த செயல்பாடுகள் கட்டாயம் டெக் உலகில் புதிய முயற்சியாக அமையும் என்று கூறப்படுகிறது. 

ஏற்கெனவே யூ-ட்யூப் மற்றும் ஃபேஸ்புக் தளங்கள் 360 டிகிரி வீடியோவில் கால் பதித்துவிட்ட நிலையில் விஎல்சி-யின் முயற்சி கட்டாயம் இந்த நிறுவனங்களுக்கு சவாலாக அமையும். ஆஃப் லைனில் வீடியோக்களுக்கு பெரிய சந்தை இருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் இந்த வெர்ஷனின் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. 

- ச.ஸ்ரீராம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!