வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (05/12/2016)

கடைசி தொடர்பு:14:14 (05/12/2016)

உங்க ஜி மெயில் ஐடில‌ டாட் இருக்கா? இதை கட்டாயம் படிங்க‌

ஜி மெயில்

யார்கிட்டயாவது மெயில் ஐடி என்னனு சொல்லும் போது ரொம்ப கவனமா டாட் அப்படிங்குற வார்த்தைய அழுத்தி சொல்லுறவங்களா நீங்க. சில பேரோட ஜி மெயில் ஐடில டாட் இருக்கும். உதாரணமா yourname.lastname@gmail.com இப்படினு ஒரு மெயில் ஐடி வைச்சிருக்கலாம் நீங்க. அப்படின்னா உங்களுக்கான கட்டுரை தான் இது. இனிமே நீங்க யார்கிட்டயும் இந்த டாட் அழுத்தி சொல்லணும்குற அவசியம் இருக்காது.

இ-மெயில் ஐடிகளில் டாட் இருப்பது காலம் காலமாக இருக்கும் விஷயம் தான். இதில் என்ன புதியது என்றால் உங்கள் மெயில் ஐடிக்கு யார் வேண்டுமானாலும் டாட் வைத்தோ அல்லது வைக்காமலோ அல்லது வேறு ஒரு இடத்தில் டாட் வைத்தோ அனுப்ப முடியும். இதில் எப்படி அனுப்பினாலும் உங்கள் மெயிலுக்கு மெயில் வரும் என்பது தான் ஜி மெயிலின் ட்ரிக்.

இந்த வசதி ஜி-மெயிலில் மட்டுமே உள்ளது. யாகூ, மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் ஐடிகளில் டாட் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ட்விட்டர் தளத்தில் டாட் என்ற வார்த்தைக்கு அனுமதியே இல்லை. சரி இதனை வைத்து என்ன பயன் என்று நீங்கள் கேட்டால் இது தான் அதற்கான பதில்,

ஜி மெயிலில் டாட் எப்படியெல்லாம் வைக்கலாம்?

1. யாரிடமாவது ஜி மெயில் ஐடியை கூறும் போது அவர்கள் தவறான புரிதலில் டாட் இடம் பெறும் இடத்தை மாற்றிவிட்டாலும் உங்களது மெயில்கள் மிஸ் ஆகாது.

john.smith@gmail.com

2. ஒருவர் உங்கள் ஜி மெயில் ஐடியில் எத்தனை டாட் வைத்தாலும் பெயரில் மாற்றம் இல்லை என்றால் உங்களுக்கு கண்டிப்பாக வந்து சேரும்.

jo.hn.smith@gmail.com

3. டாட் வைக்கவே மறந்து விட்டார் என்றாலும் உங்களுக்கான மெயில் உங்களை வந்து சேரும்.

johnsmith@gmail.com

எங்கு டாட் வேலை செய்யாது?

அலுவலக மெயில் ஐடியை சில ஜி மெயில் ஐடியாக வைத்திருப்பார்கள். அவர்களது அட்மின் இதற்கு அனுமதி வழங்கினால் மட்டுமே இந்த டாட் பிரச்னையை அவர்கள் சமாளிக்க முடியும். இல்லையெனில் வராது. உதாரணமாக @companyname.com என முடியும் மெயில் ஐடிகளில் நீங்கள் டாட்-ஐ இடம் மாற்றி அனுப்பினால் அந்த மெயில் அவர்களை போய் சேராது.

ஒரு சின்ன டாட் ஆனா இதுல எவ்ளோ விஷயம் இருக்கு. இனிமே யாராவது உங்க ஜி மெயில் ஐடி கேட்டா... டாட் வைத்தும் சொல்லலாம், வைக்காமலும் சொல்லலாம். அப்பறம் பாஸ் உங்க மெயில் ஐடி என்ன? உங்க நண்பர்கள் சில பேரோட ஐடிக்கு ட்ரை பண்ணி பாருங்க பாஸ்!!

ஏன் டாட் வைக்கிறார்கள்?

பலர் வேண்டுமென்றே டாட் வைப்பதில்லை. வேறு வழியில்லாமல் எளிமையான புரிதல் மெயில் ஐடிகளில் வேண்டும் என்பதற்காக கூகுள் பரிந்துரைக்கும் மெயில் ஐடிகளில் இருக்கும் டாட்-ஐ ஏற்றுக்கொள்வதாகவும், இன்னும் சிலர் இனிஷியல் எழுத்து டாட்டில் இருந்தால் எளிதில் நினைவில் வைத்து கொள்ள முடியும் என்பதற்காக வைத்துள்ளதாக கூறியுள்ளனர். கூகுள் ஒவ்வோரு எழுத்துக்கும் நடுவில் டாட் வைத்தாலும் ஏற்றுக்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இனிமேல் ஜிமெயில் ஐடி க்ரியேட் செய்தால் டாட் என்பதை மறந்துவிடுங்கள்.

- ச.ஸ்ரீராம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்