இந்த வருடம் மார்க் சக்கர்பெர்க் எத்தனை ''லைக்'' பண்ணிருக்காரு தெரியுமா?

ஃபேஸ்புக்ல காலைல எழுந்து யாருக்காவது லைக் போடணும், இல்ல நமக்கு எத்தனை லைக் வந்திருக்குனு பாக்கணும். இது தினசரி வாழ்க்கைல தவிர்க்க முடியாத விஷயமா மாறிடுச்சு. நமக்கே இப்படின்னா ஃபேஸ்புக்க கண்டுபுடிச்ச மார்க் சக்கர்பெர்க் யாருக்கெல்லாம் லைக் போடுவாரு? இது தான் பல பேரோட கேள்வி.

இந்த வருஷம் நடந்த முக்கிய நிகழ்வுகள் எல்லாத்தையும் வீடியோவா தொகுத்து வழங்குற yearinreview2016 வசதிய ஃபேஸ்புக் கொஞ்ச நாளைக்கு முன்னாடி வெளியிட்டது. இதில் இந்த வருடத்தில் நாம் பதிவிட்ட சிறந்த புகைப்படங்கள், நாம் எத்தனை பேரை லைக் செய்திருக்கிறோம். அதிக லைக் வாங்கிய புகைப்படங்கள் என 70 நொடிகள் கொண்ட தொகுப்பாக வீடியோவை ஃபேஸ்புக் தயாரித்து தரும்.

தனது yearinreview2016- ஐ தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள மார்க் சக்கர்பெர்க், இந்த வருடத்தில் மட்டும் 7,800 பதிவுகளுக்கு லைக் போட்டிருக்கிறார். லட்ச கணக்கில் லைக் வாங்கும் மனிதர் 7800 பதிவுகளை இந்த ஒரு வருடத்தில் லைக் செய்திருப்பது கொஞ்சம் ஆச்சர்யம் தான்.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் தன் மகள் குறித்த பதிவுகளை பதிவிட்டு வந்த மார்க் சக்கர்பெர்க் பின்னர் பருவநிலை, நோயற்ற உலகம், அமெரிக்க தேர்தல், ஆகுமென்டட் ரியாலிட்டி, கல்வி என பல பதிவுகளை பதிவு செய்து டம்லைன் கில்லியாகவே இருந்துள்ளார். குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் இடயேயான டி20 போட்டிக்கு ஸ்டேட்டஸ் தட்டியதெல்லாம் வேற லெவல் வைரல்

இந்த வருடத்தில் மார்க்கின் முக்கிய நிகழ்வுகள்:

1. மார்க் சக்கர்பெர்க் தன் மகள் மேக்ஸுடன் தடுப்பூசி போடுவதற்காக அமர்ந்திருக்கும் புகைப்படம் தான் அவரது இந்த வருடத்தின் சிறந்த பதிவாக உள்ளது.

2. ஃபேஸ்புக் அறிமுகம் செய்யவுள்ள ஆக்மென்டட் ரியாலிட்டி புகைப்படங்களை மார்க் வெளியிட்ட படம்

3.நோயற்ற உலகை உருவாக்குவதற்காக சான்-சக்கர்பெர்க் பவுண்டேஷன் மூலம் உதவிகளை செய்யவிருப்பத்தை அறிவித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்

4. காபி வித் செலினா கோம்ஸ் - இன்ஸ்டாகிராமின் மிகப்பெரிய ஸ்டாருடன் ஒரு காபி சந்திப்பு

மார்க்

5. சான் ஃப்ரான்சிஸ்கோவில் நடைபெற்ற மாரத்தானில் ஓடியது

6.  சான்-சக்கர்பெர்க் இனிஷியேட்டிவ் பற்றி போப் ஆண்டவரிடம் விளக்கிய தருணம்

7. 13 வருங்களுக்கு முன்பு தன் மனைவியுடனான முதல் காதல் சந்திப்பு

8. நைஜீரிய குழந்தைகளுடனான சம்மர் கோடிங் கேம்ப்

 

9. ஹாலோவீன் டே ட்ரெஸ்ஸிங் வித் ஃபேமிலி

10. இந்த வருடம் மொத்தம் 7800 பதிவுகளை லைக் செய்துள்ளார் மார்க்

 

 

இது தான் மார்க் சக்கர்பெர்க்கின் 2016 மறக்க முடியாத 10 நிகழ்வுகளாக ஃபேஸ்புக் வெளியிட்டுள்ளது. இதே போன்று உங்களது டாப் தருணங்களை பகிர்ந்து கொள்ள facebook.com/yearinreview2016 என்ற லின்க்கில் தெரிந்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

ஒவ்வொரு வருடமும் இதே போன்று முக்கிய நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் இந்த வருடம் புதிதாக எத்தனை பேருக்கு லைக் செய்துள்ளோம் என்பதையும், புதிதாக எத்தனை நண்பர்களை பெற்றுள்ளோம் என்பதையும் காட்டுகிறது. மேலும் ஹார்ட், ஹஹா, வாவ், சோகம், ஆங்ரி இமோஜிகள் எத்தனை அளித்துள்ளோன்ம் என்பதையும் காட்டுவது ஆஸம்...ஆஸம்...இதேபோல் உங்களுக்கு இந்த வருடத்தில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை கமெண்ட்டில் தெரிவியுங்களேன். 

ச.ஸ்ரீராம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!