2016-ல் சொதப்பிய 5 டெக் நிகழ்வுகள்! #2016Rewind

2016 எந்த அளவுக்கு டெக் புரட்சிகள் நடைபெற்றதோ அதே அளவுக்கு சொதப்பல்களுக்கும் நடந்திருக்கு. முன்னாடியெல்லாம் வெடிகுண்டு இருக்கானு செக் பண்ணது மாறி இப்போ இந்த கேட்ஜெட் இருக்கா உள்ள வராதீங்கனு தடைனு சொல்லுற அளவுக்கு டெக் உலகத்துல சோக நிகழ்வுகள் இருக்கு. இந்த வருடம் சொல்லி அடிப்போம்னு சொல்லி சொதப்பிய ஐந்து டெக் நிகழ்வுகள் இதோ....

1. நெருப்புடா கேலக்ஸி 7:

டெக்

சாம்சங் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்.  சுமார் 2.5 மில்லியன் எஸ் 7 போன்களைத் தயாரித்த சாம்சங் நிறுவனம் அதில் கிட்டத்தட்ட 1 மில்லியன் மொபைல்போன்களை விற்பனை செய்தது. ஆனால் இந்த சாம்சங் நோட் 7 மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகள்.

சாம்சங் கேலக்ஸி நோட் 7  சார்ஜில் இருக்கும் வேளையில் தீடீரென தீப்பற்றி எரிகிறது என்பது தான் பிரதான குற்றச்சாட்டு.. பொதுவாக ஸ்மார்ட்போன் பேட்டரிகள் லித்தியத்தால் ஆனவை. அவற்றுள் இரண்டு எலக்ட்ரோடுகள் எதிரெதிர் திசையில் வைக்கப்பட்டிருக்கும். சார்ஜ் செய்யும்போது லித்தியம் அணுக்கள்  நகரும். ஆனால் ஒருபோதும் இந்த இரண்டு எலக்ட்ரோடுகளும் ஒன்றை ஒன்று தொட்டுவிடக்கூடாது. அப்படி நடந்துவிடாமல் தடுக்க அதில் செப்பரேட்டர் வைக்கப்படும். நோட் 7-ல் இந்த செப்பரேட்டருக்கான இடைவெளி  மிகவும் சிறியதாக அமைந்ததே அது வெடிப்பதற்கான காரணம். என கூறப்பட்டது. வாடிக்கையாளர்கள் மொபைலை நீண்ட நேரம் சார்ஜ் செய்வதும், பரிந்துரைக்கப்பட்ட சார்ஜர்களை பயன்படுத்தாததுமே நோட் 7 வெடித்துச் சிதறக் காரணம் என சாம்சங் சமாளித்தாலும் இந்த வருடத்தில் மிக மோசமான டெக் சொதப்பல் இது தான்.  பின்னர் இந்த ஸ்மார்ட்போன்களை திரும்ப வாங்கி கொண்டது சாம்சங்.

2.  வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்

 

 

 

பேஸ்புக் நிறுவனம் ஆப்பிரிக்க கண்டத்தின் 14 நாடுகளில் இணையதள இணைப்பை மேம்படுத்துவதற்காக ஒரு திட்டத்தை மேற்கொண்டது. இதற்காக, சுமார் 200 மில்லியன் டாலர் மதிப்பில் ஒரு செயற்கைகோள் ஒன்றை பேஸ்புக் நிறுவனம் உருவாக்கியது. அந்த செயற்கைகோளின் பெயர் ஆமோஸ்-6. இதனை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்புவதற்காக, எரிபொருள் சோதனை நடந்து கொண்டிருந்த நிலையில், அது திடீரென வெடித்துச் சிதறியதால், அதிர்ச்சியில் இருக்கிறது பேஸ்புக்.

அதன்படி, ஆமோஸ்-6 செயற்கைகோள் தயாரிக்கும் பணி, சில மாதங்களுக்கு முன்னரே துவங்கியது. அதை விண்ணில் செலுத்துவதற்காக உலகின் முன்னணி தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள 'கேப்கனவெரல்' மையத்தில் இருந்து ஸ்பேஸ்-எக்ஸ்ஸின் பால்கான்-9 என்னும் ராக்கெட்டின் மூலம் விண்ணில் செலுத்துவதற்கான பரிசோதனைகள்  நடந்து கொண்டிருந்தன. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அந்த ராக்கெட் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதற தொடங்கியது. அந்த விபத்தில் அந்த ராக்கெட்டுடன் பேஸ்புக்கில் இருந்த 6 செயற்கைக்கோள்களும் முற்றிலுமாக அழிந்தது.  மிகப்பெரிய பொருட் சேதம், புதிய முயற்சியில் தோல்வி என கொஞ்சம் லைட்டாக ஃபீல் ஆன ஸ்பெஸ் எக்ஸ் தனது மார்ஸ் மிஷன் வேலைகளில் ஆர்வம் காட்டி வருகிறது. 

3. மார்க் சக்கர்பெர்க் செத்துட்டாரா?

ஃபேஸ்புக் நவம்பர் மாதம் 20 லட்சம் பேருக்கு, அவர்கள் 'இறந்துவிட்டதாக' தவறான தகவலை, சம்பந்தப்பட்டவர்களின் முகப்பு பக்கத்தில் போஸ்ட் செய்தது.  இது பற்றி அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், 'இறந்தவர்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்ற வேண்டிய தகவலை, தவறுதலாக உயிரோடு இருக்கும் பலரது பக்கத்தில் பதிவேற்றிவிட்டோம். ஆனால், சிறிது நேரத்துக்குப் பின்பு இந்த பிரச்னை சரி செய்யப்பட்டுவிட்டது' என்று கூறினார். இதில் இன்னும் கொடுமையான விஷயம் என்னவென்றால் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் இறந்துவிட்டார் என்று அவர் பக்கத்தில் வந்த நோட்டிஃபிகேஷன் தான்...என்ன கொடுமை மார்க் இது...

4. பறக்காத  ராசாளி - கோ ப்ரோ கர்மா ட்ரோன்

கோப்ரோ கர்மா ட்ரோன் மணிக்கு 35 மைல் பறக்ககூடிய வகையில் தரையிலிருந்து 1000 மீ உயரத்தில் பறக்கும் என்று கூறப்பட்டு வெளியிடப்பட்டது . தெளிவான கேமரா வசதி, துல்லியமான அமைப்பு என மாஸ் என்ட்ரி கொடுத்த கோப்ரோ சொதப்பியது பவர் அமைப்பில்...பாதியில் பறக்கும் போதே சார்ஜ் இல்லாமல் செயலிழந்து விடுகிறது என்ற குற்றச்சாட்டில் அடிவாங்கியது. பாதி வழியில் நிற்பது பிரச்னை என்பதால் தயாரிப்பை திரும்ப பெற்றது க்ப்ரோ...

5. மைக்ரோசாஃப்ட் சாட் பாட் 

டாய் (Tay) எனும் மைக்ரோசாஃப்டின் சாட் பாட் வெளியிடப்பட்ட 24 மணி நேரத்தில் திரும்ப பெறப்பட்டது. ஆப்பிள் சிரிக்கு போட்டியாக கருதப்பட்ட இந்த பாட் தனது பதில்களில் துல்லியத்தன்மை இல்லாததாலும், சம்பந்தமில்லாமல் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தவறான பதில்கள் கூறியது. இதனால் இந்த சாட்பாட்டை ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பியது மைக்ரோசாஃப்ட். மீண்டும் இதில் வேலை செய்து வரும் மைக்ரோசாஃப்ட் அடுத்த ஆண்டு வெற்றி பெறும் என அந்த நிறுவனம் உறுதியளித்துள்ளது.

ஆப்பிள் போனில் ஆடியோ ஜாக் இல்லை, போக்கிமான் கோ உயிரை கொல்லும் என பல சர்ச்சைகள் நிறைந்த ஆண்டின் மோசமான பதிவுகள் இவை. உங்களுக்கு 2016ல் ஏற்பட்ட  டெக் அனுபவங்களை கமெண்டில் பகிருங்கள்.
 

- ச.ஸ்ரீராம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!