வாட்ஸ்அப்ல க்ரூப் மாறி மெஸேஜ் அனுப்பிட்டீங்களா? இதைப் படிங்க!

வாட்ஸ்அப்

ந்த பாஸ் தொல்ல தாங்க முடியலடா! டார்கெட்ட முடிக்கச் சொல்லி உசுற வாங்குறாருனு தெரியாம பாஸுக்கே வாட்ஸ்அப் ஃபார்வர்டு பண்ற ஆளா நீங்க... இல்ல கேர்ள் ஃப்ரெண்டுக்கு அனுப்ப வேண்டிய லவ் யூ மெஸேஜ் வேற யாருக்கோ போய் முழிக்கிறீங்களா?  இனிமே நீங்க பயப்படாம இருக்கலாம் எப்படி தெரியுமா? 

ஆமாம், வாட்ஸ்அப் ஆனது மெஸேஜ் எடிட்டிங் அண்ட் ரீகாலிங் வசதியை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் மூலம் நீங்கள் அனுப்பிய மெஸேஜை திரும்ப பெறவும், அதனை எடிட் செய்யவும் முடியும் என்கிறது வாட்ஸ்அப்.

WABetainfo என்ற ட்விட்டர் பக்கம், வாட்ஸ்அப்பில்  வரவிருக்கும் பீட்டா வசதிகளை பற்றி முன் கூட்டியே கூறி வருகிறது. வீடியோ மற்றும் வாய்ஸ் கால் வசதிகளைப் பற்றி முதலில் கூறியது இந்த பக்கம் தான். இந்த பக்கம் பதிவெற்றிய ட்விட்டில் கூறியிருப்பது என்னவெனில், 

"வாட்ஸ்அப் நீங்கள் அனுப்பிய மெஸேஜ்களை எடிட் செய்யும் மற்றும் திரும்பப் பெறும் வசதியை பீட்டா தளத்தில் கொடுத்திருக்கிறது. பீட்டா தளத்துக்கு மட்டும் அளித்துள்ளதால், இந்த வசதியில் மேலும் மாற்றங்கள் ஏற்படலாம். ஆப்பிள் நிறுவனத்தின் iOS 2.17.1.869 தளத்தில் இந்த வசதி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது."
 

வாட்ஸ்அப்

சோதனை ஓட்டமாக ஒரு சில பகுதிகளில் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கும் இந்த சேவை அவர்களிடமிருந்து வரும் ஃபீட் பேக்கை அடிப்படையாக கொண்டு மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக அறிமுகம் செய்யப்படும். வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனை பயன்படுத்த ஆப் ஸ்டோர் அல்லது ப்ளே ஸ்டோருக்கு சென்று சைன் அப் செய்ய வேண்டும். கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த ஆப்பின் டெஸ்டராக நீங்கள் இருக்கிறீர்கள் என்ற தகவலும் இடம் பெற்றிருக்கும்.

வாட்ஸ்அப் அப்டேட்டில் அனுப்பிய செய்திகளை திரும்பப் பெற இயலும் என்றாலும்  ஒரு சில நிமிடங்களுக்குள் தான் எடிட் அல்லது திரும்பப் பெற முடியும். அதற்குள் செய்யவில்லை என்றால் அது அனுப்பிய நபருக்கு சென்று விடுமாம். இந்தியா வாட்ஸ்அப் பயன்பாட்டில் முன்னணி இடம் வகிப்பதால் இந்தியாவில் முதலில் இந்த வசதி அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்அப்  வீடியோ காலிங் வசதி இந்தியாவில் தான் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

உடனடி தகவல் ஆப்ஸ்களில் இந்தியாவில் வாட்ஸ்அப் தான் முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் 16 கோடி மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம்  தினமும் வாட்ஸ்அப் மூலம் பத்து கோடி கால்கள் செய்யப்படுகின்றன. வாட்ஸ்அப்பை ஃபேஸ்புக் வாங்கியதிலிருந்து அதன் புதிய விஷயங்கள் மக்களை பெரிதும் கவரும் வகையில் உள்ளன. 

ம. சக்கர ராஜன்,
மாணவர் பத்திரிகையாளர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!