Apple AirPods: மறுசுழற்சி செய்வதில் சிக்கல்? | Controversy arises over Apple's new AirPods recycling

வெளியிடப்பட்ட நேரம்: 02:20 (21/12/2016)

கடைசி தொடர்பு:10:19 (21/12/2016)

Apple AirPods: மறுசுழற்சி செய்வதில் சிக்கல்?

ஆப்பிள் ஏர்பாட்ஸ்

ஆப்பிள் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம், வயர்லெஸ் ஏர்பாடுகளை (AirPods) அறிமுகப்படுத்தியது. ஆனால் திட்டமிட்டதை விட தாமதமாகத்தான் இது ரிலீஸ் ஆனது. இந்த ஏர்பாட்களை மறுசுழற்சி செய்வது கடினமான விஷயமாம். மேலும் இதன் உள்ளே லித்தியத்தால் ஆன பேட்டரி இருப்பதால், இதை அழிக்கும்போது எளிதில் தீப்பற்றிக் கொள்ளும் அபாயம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளின் உட்பாகங்கள் மிகவும் நெருக்கமாக உள்ளதால், மறுசுழற்சியின் போது அவற்றைப் பிரித்தெடுப்பது கடினம் என சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், புதிய ஏர்பாடுகளை மறுசுழற்சி செய்வதிலும் சில சிக்கல்கள் உள்ளதாக, பழுதுபார்க்கத் தேவைப்படும் எலக்ட்ரானிக் உதிரி பாகங்களைத் தயாரித்துவரும் 'iFixit' என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

4 கிராம் எடைகொண்ட இந்த புதிய வயர்லெஸ் ஏர்பாடுகளின் உள்ளே லித்தியம் பேட்டரி ஒட்டப்பட்டுள்ளது. இதனால் மறுசுழற்சி செய்யாமல் அழிக்கும்போது எளிதில் தீப்பற்றிக் கொள்ளும் வாய்ப்பும் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய ஏர்பாடுகளின் யூசர் கைடில், ஏர்பாடுகளைக் குப்பையில் தூக்கி வீசக்கூடாது எனவும், எலக்ட்ரானிக் கழிவாகக் கருதி முறையாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும், ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க