வெளியேறும் உயரதிகாரிகள் - தடுமாறும் ட்விட்டர்

ட்விட்டரின் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி ஆடம் மெஸிங்கர் மற்றும் துணைத்தலைவர் (தயாரிப்பு) ஜோஸ் மெக்ஃபார்லண்ட் ஆகியோர், இன்று ட்விட்டரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இருவரும் இதை இன்று தங்களது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளனர். முன்னதாக, தலைமைச் செயல் அதிகாரி ஆடம் பெயின் கடந்த மாதம் ட்விட்டரில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்களிடம் ட்விட்டர் நிறுவனத்தை விற்க முயற்சிகள் நடந்துவருவதாக சமீபத்தில் தகவல்கள் வந்தன. சமீபத்தில் 'வைன்' எனப்படும் தனது வீடியோ சேவையையும் ட்விட்டர் நிறுத்திக்கொண்டது. செலவுக் குறைப்பு நடவடிக்கையாக நூற்றுக்கணக்கான அதிகாரிகள் ட்விட்டரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், உயரதிகாரிகளின் இந்த அடுத்தடுத்த வெளியேற்றத்தால் அந்நிறுவனம் தடுமாற்றத்தைச் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!