வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (22/12/2016)

கடைசி தொடர்பு:10:13 (23/12/2016)

’24’ வாட்ச்... ’ரெமோ’ விசில்... ’கணிதன்’ கேமரா... தமிழ் சினிமாவின் சுவாரஸ்ய கேட்ஜெட்ஸ்! #2016Rewind

2016

ஜேம்ஸ்பாண்டு ரேஞ்சுக்கு இல்லையென்றாலும் தமிழ் சினிமாவிலும் கேட்ஜெட்டுகள், சில வித்தியாசமான பொருட்கள் முக்கிய ரோல் வகிப்பதுண்டு. வித்தியாசம் என சொல்ல முடியாவிட்டாலும், அந்த கதையில் அதற்கு ஒரு ஸ்பெஷல் இடம் இருக்கும். இப்படியே “இல்லையென்றாலும்” போட ஆரம்பித்தால் கட்டுரையே எழுத முடியாது என்பதால் நீங்களாக கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும். 2016 ஆம் ஆண்டு தமிழ்ப்படங்களில் வந்த சில உயிரற்ற கேரக்டர்களின் தொகுப்பு.

’24’ வாட்ச்

சூர்யாவால் 24 படத்தில் கலக்க முடிந்ததற்கு காரணம் அவர் ஒரு வாட்ச் மெக்கானிக் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? விதவிதமான, குட்டி குட்டியான , ரசனையான வாட்ச்களை உருவாக்கியிருந்தது படக்குழு. இந்த ஆண்டு என்றில்லை; காலத்தில் எந்த மூளைக்கு சென்றாலும் தமிழ் சினிமாவின் சிறந்த வாட்ச் 24 வாட்ச் என நிச்சயமாக சொல்லலாம். 

’ரெமோ’ விசில்

“ஓய் செல்ஃபி” என வாயால் விசிலடிக்கும் ரெமோ, தன் குல்ஃபிக்கு பரிசளித்த அந்த விசில் ஞாபகம் இருக்கிறதா? இந்தியாவில் இருக்கும் அத்தனை சீரியல் பல்புகளையும் வாடகைக்கு எடுத்து எரியவிட்டு, நல்லியின் சிறந்த பட்டுப்புடவையை கட்டிக்கொண்டு, Tangled படத்தில் வருவது போல ஆயிரக்கணக்கான Lantern பறக்கவிட்டு, தனது காதலை சொல்லும் காதலன், காதலிக்கு தந்தது என்னவோ விசில் தான். காதல் படம் என்றாலே சுவாசக்காற்று, மூச்சு என எழுதி வந்த தமிழ் சினிமாவில் அதற்கு விஷுவல் வடிவம் தந்தது ரெமோ டீம். விசில் ஐடியா நிஜமாகவே விசிலடிக்கும் தூண்டிய ஐடியாதான். 

’தெறி’ பிரம்பு

‘ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்” என டீசரிலே பட்டையை கிளப்பியது பிரம்பு. ”வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்; விஜயகுமாருக்கு பிரம்பே ஆயுதம்” என மீம்ஸ் எல்லாம் போட்டார்கள். வில்லன் கேட்கும் கேள்விகள் பிடிக்காமல் பறந்து பறந்து அடிக்கும் ஆக்‌ஷன் ஹீரோக்கள் மத்தியில், வில்லன்களிடம் நாலாப்பு கேள்விகள் கேட்டு பிரம்பால் அடிக்கும் காமெடி கதகளிக்கு ஏகப்பட்ட லைக்ஸ். தெறி என்றாலே நினைவுக்கு வருவதில் பிரம்புக்கும் ஸ்பெஷல் இடம் உண்டு. அது சாதா பிரம்பு அல்ல; போலீஸ் பிரம்பு ஆச்சே! 

”இருமுகன்” ஸ்பீடு:

புஜாரா மோடில் இருந்து கோஹ்லி மோடுக்கு மாற்றும் ‘ஸ்பீடு”தான் சென்ற ஆண்டு தமிழ் சினிமாவின் சிறந்த கண்டுபிடிப்பு. லவ்வின் ஆட்களை அவர்கள் இடத்திலே சென்று, ஸ்பீடு எடுத்து துவம்சம் செய்வார் ஹீரோ விக்ரம். ஆனால், லவ்வின் ஆட்கள் கையில் ஸ்பீடு இருந்தும் பயன்படுத்தமாட்டார்கள். ஸ்கிரிப்ட் எழுதும்போது இயக்குநரும் ஸ்பீடு யூஸ் பண்ணிருக்கலாம். விமர்சனங்கள் வறுத்து எடுத்தாலும், வசூலில் ஸ்பீடு எடுத்து பறந்தா இருமுகன்.

’பென்சில்’

24 வாட்ச், ரெமோ விசில் என டைப் பண்ணும் சிரமம் வைக்காமல் படத்தின் பெயரையே பென்சில் என வைத்ததற்கு நன்றி டீம். திரில்லர் படம். ஒரு கொலை. அது பென்சிலால செய்யப்பட்டது. பென்சிலால் கலை செய்யலாம். கொலை செய்யலாமா என்பவர்கள் தேடிப்பிடித்து படம் பார்க்கவும். பென் மட்டுமில்லைங்க;Pencil also mightier than sword ந்னு புரிஞ்சிப்பீங்க. கூரான பென்சிலால தான் கொலை நடக்கும். ஆனால், படம்தான் மொக்கை.

’சென்னை 28’ பேட்

இதை படிக்கும் போதே கோபி பேட் தீம் ம்யூஸீக் பின்னாடி ஓடுதா? அதுதான் இதோட ஸ்பெஷல். சைனால இருந்து வரும் கொசு பேட்டுக்கு ஆயுள் 2 மாசம் தான்.ஆனா, நம்ம கோபி பேட்டுக்கு 25க்கும் மேல.2007ல முதல் பாகம் வந்தப்பவே, அதோட ஃப்ளாஷ்பேக்லதான அந்த பேட்டை கோபி டாடி வாங்கி தருவாரு? 300 ரன் அடிச்ச கருண் நாயரு என்ன பேட்டு வச்சிருந்தாருன்னு பரபரப்பா பேசுறாங்க. எனக்கு என்னவோ அது கோபி பேட்டாதான் இருக்கும்னு ஒரு நம்பிக்கை. 

’அச்சம் என்பது மடமையடா’ பைக்

சிம்புவுக்கு நிறைய கேர்ள் ஃப்ரெண்டு. ஆனால் அதுல டாப் டிரெண்டு ராயல் என்ஃபீல்டு -அப்படின்னுதான் படத்தையே ஆரம்பிச்சிருப்பாரு கெளதம். ஓப்பனிங் பாட்டு கூட இந்த புல்லட்டுக்குதான். சொல்ல போனா இந்தப் படமே பைக்க நம்பித்தான். அதனாலதான் பைக் இல்லாத செகண்ட் ஹாஃபுக்கு தமிழ் ரசிகர்கள் அவ்ளோ டிஸ்லைக்ஸ் போட்டாங்க. இது சாதா வண்டி இல்லைங்க. கொஞ்சம் குண்டு மஞ்சிமாவும், அவ்ளோ குண்டு சிம்புவும் கம்ஃபர்டப்ளா டபுள்ஸ் போனாங்கன்னா பாத்துக்கோங்களேன்!

’கணிதன்’ கேமரா

பேனால இருந்து பேண்ட் ஸிப் வரைக்கும் எல்லாத்திலும் கேமரா வந்துடுச்சு. கணிதன்ல கார் சாவி மாடல்ல ஒரு கேமரா வச்சிருப்பாங்க. அதை எதிர் டீம் பார்த்தும் அவங்களுக்கு சந்தேகம் வராது. இதுவும் ஒரு கேட்ஜெட்ன்ற வகைல மட்டும்தான் இந்த லிஸ்டுல சேர்ந்திருக்கு. மத்தபடி 4 வரி சேர்ந்தாப்ள எழுதுற அளவுக்கு கூட இந்த கேமரால விஷயம் இல்லை ப்ரோ!

-கார்க்கிபவா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்