வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (22/12/2016)

கடைசி தொடர்பு:14:55 (22/12/2016)

பம்மிய கூகுள்...மலிவான யாகூ...மாஸ் போக்கிமான்! #2016TechRecap - அத்தியாயம் 2

ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான 2016TechRecap டெக் நிகழ்வுகளுக்கு க்ளிக் செய்க:

மே முதல் ஆகஸ்ட் வரை டெக் நிகழ்வுகள் இதோ....

2016TechRecap

மே #2016TechRecap

டெஸ்க்டாப்புக்கு வந்தாச்சு வாட்ஸ்-அப்!

இத்தனை நாட்களாக 'வாட்ஸ்-அப் வெப்' மூலம் பிரவுசரில் இருந்து வாட்ஸ்-அப்பை பயன்படுத்தி வந்திருப்பீர்கள். இப்போது வாட்ஸ்-அப் மென்பொருள் விண்டோஸுக்கும்(8க்கு மேல்), மேக் ஓ.எஸுக்கும் வந்துவிட்டது. https://www.whatsapp.com/download/ தளத்துக்கு சென்று அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பம்மியது கூகுள்

இந்திய வரைபடத்தை தவறாகக் காட்டினால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம் என புதிய மசோதாவை இந்திய அரசு அறிவித்திருந்தது. இதனால், இத்தனை ஆண்டுகளாக காஷ்மீரையும், அருணாச்சல பிரதேசத்தையும் சர்ச்சைக்குரிய பகுதிகளாக காட்டி வந்த கூகுள் மேப்ஸ், இப்போது இரண்டையும் இந்திய எல்லைக்குள் காட்டுகிறது!

ஃபேஸ்புக்கின் 'ட்ரெண்டிங்' லிஸ்ட் ரகசியம் இதுதான்!

ஃபேஸ்புக்கில் வலதுபக்கம் இருக்கும் 'ட்ரெண்டிங்' பகுதியைப் பார்த்திருப்பீர்கள். அது ட்விட்டர் போலவே, தானாகவே நிர்ணயிக்கப்படுகிறது என எண்ணியிருப்பீர்கள். அதுதான் இல்லை. இளம் பத்திரிகையாளர்கள் கொண்ட சின்ன டீம்தான் ஃபேஸ்புக்கில் எது ட்ரெண்ட் என நிர்ணயிக்கிறதாம். இதன் பின்னால் பெரிய அரசியலே இருக்கிறதாம்.


ஜூன் #2016TechRecap

N for Nougat: ஆண்ட்ராய்டின் அடுத்த வெர்ஷன்

ஆண்ட்ராய்டின் அடுத்த வெர்ஷனின் பெயரை வெளியிட்டது கூகுள். 'Nougat' என்ற சர்க்கரை, முட்டை சேர்த்த ஒரு சாக்லேட் வகையின் பெயரை வைத்துள்ளது. ஆண்ட்ராய்டு வெர்ஷனில் இந்த முறை N வரிசையில் உள்ள இனிப்பு வகையின் பெயரை வைக்க, மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு, அதிலிருந்து இந்த பெயர் தேர்வாகியுள்ளது.

இப்போது 500 மில்லியன் இன்ஸ்டாகிராமர்கள்

500 மில்லியன் பயனாளர்களை தொட்டு இன்ஸ்டாகிராம் சாதனை படைத்துள்ளது. ஒன்பது மாதங்களில் 100 மில்லியன் பயனாளர்கள் இணைந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் 300 மில்லியன் பேர் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துகிறார்கள் என்கிறார் மார்க் சக்கர்பெர்க். இன்ஸ்டாகிராமின் 80% பயனாளர்கள் அமெரிக்காவுக்கு வெளியே இருப்பவர்கள்.

மார்க் மகளுக்கு எழுதிய கடிதம்!

இன்று தந்தையர் தினத்தை ஒட்டி மார்க் சக்கர்பெர்க் தனது அன்பு மகளுக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். மகள் பிறந்த மகிழ்ச்சி, தற்போதைய உலகம் எப்படி இருக்கிறது? இன்னும் 20 வருடம் கழித்து இந்த உலகம் தொழில்நுட்பம், மருத்துவம் எல்லாம் எப்படி இருக்கும்? என பாசமாக மகளுக்கு மினி லெக்சரே எடுத்திருக்கிறார்.


ஜூலை #2016TechRecap

சீப்பான ரேட்டுக்கு விலை போனது Yahoo!

யாஹூ நிறுவனத்தை 5 பில்லியன் டாலர்களுக்கு வெரிசான் நிறுவனம் வாங்குவதாக அறிவித்துள்ளது. Search, மெயில், மெசஞ்ஜர் என அனைத்தும் வெரிசான் கைக்கு செல்கிறது. ஒரு காலத்தில் 125 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டிருந்த யாஹூ, மிக சீப்பாக விலைபோய் உள்ளது. மாற்றத்துக்கு ஏற்ப மாறாததே வீழ்ச்சிக்கு காரணம் என்கிறார்கள்.

இனி ஆண்ட்ராய்ட் ஃபோன்களிலும் 'ப்ரிஸ்மா'

நமது ஃபோட்டோக்களை பெயின்டிங் போல அச்சு அசலாக மாற்றி வியக்க வைத்த 'ப்ரிஸ்மா' ஃபோட்டோ எடிட்டர், ஐஃபோன்களில் மட்டும் இடம்பெற்றிருந்தது. தற்போது, இது ஆண்ட்ராய்ட் ஃபோன்களுக்காக அப்டேட் செய்யப்பட்டுள்ளது. பலவிதமான ஃபோட்டோ ஃபில்டர்களை உள்ளடக்கிய இது, செல்ஃபி பிரியர்களுக்கான ஹேண்டி ஃபோட்டோஷாப்.

நீங்களும் வாங்கலாம் ட்விட்டரில் ப்ளூ டிக்

ட்விட்டரில் இனி அனைவரும், தங்கள் அக்கவுண்டை ப்ளூ டிக் பெற்ற Verified அக்கவுண்ட்டாக மாற்றிக் கொள்ளலாம். இதற்கான ஃபார்ம் Help->My Account-> Manage your Account-> Verified Account என்ற பேஜில் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் தரும் தகவல்கள் மற்றும் உங்கள் ட்விட்டர் அக்கவுண்டின் செயல்பாடுகளை ஆராய்ந்து ப்ளூ டிக் வழங்கப்படும்.

மெகா வைரலில் Pokémon Go ஸ்மார்ட்போன் கேம்

கடந்த புதன்கிழமை வெளியான Pokémon Go ஸ்மார்ட்போன் கேம் இப்போது மெகா வைரலில் உள்ளது. பல லட்சம் பேர் விளையாட, இதை உருவாக்கிய நியான்ட்டிக்ஸ் நிறுவனத்தின் சர்வர்களே படுத்துக்கொண்டன. Augmented Reality முறையில் இதில் நாம் போக்கிமான்களை பிடித்து விளையாடலாம். அடுத்த சில வாரங்களுக்கு இதுதான் ஹாட் டாபிக்!

வியாழனை அடைந்தது ஜுனோ விண்கலம்!

நாசாவால் 2011-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட ஜூனோ விண்கலம் ஐந்து வருடங்கள் பயணித்து, 135 கோடி கிலோ மீட்டர்கள் கடந்து வியாழன் கிரகத்தை அடைந்துள்ளது. அடுத்த 18 மாதங்களில் குறைந்தது 30 தடைவை வியாழனை சுற்றி வந்து அந்தக் கிரகம் குறித்த ஆராய்ச்சியில் ஜுனோவை ஈடுபட வைக்க ஆராய்ச்சிக்கு குழு திட்டமிட்டுள்ளது.


ஆகஸ்ட் #2016TechRecap

இதற்காகத்தான் வாட்ஸ்-அப்பை வாங்கியதா FB?

வாட்ஸ்-அப்பை, ஃபேஸ்புக் 21.8 பில்லியன் டாலருக்கு வாங்கியபோதே சுதாரித்திருக்க வேண்டும் போல. வாட்ஸ்-அப்பின் புதிய ப்ரைவஸி பாலிசியில், இனி ஃபேஸ்புக்குடன் நமது போன் நம்பர்களை பகிர்ந்துகொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் நம்பர், போன் தகவல்களை வைத்து இனி ஃபேஸ்புக்கில் விளம்பரங்கள் காட்டப்படுமாம்.

ஃபேஸ்புக்கை வீழ்த்திய AdBLockers

வலைதளங்களில் எரிச்சலூட்டும் விளம்பரங்களை தடை செய்ய உருவாக்கப்பட்டது தான் Adblockers. ஃபேஸ்புக்கில் நமக்கு தொல்லை தரும் விளம்பரங்களை தடை செய்துவிடுகிறது Adblockers. இதை முறியடிக்க ஃபேஸ்புக் எவ்வளவு முயற்சி செய்தாலும், Adblockers புதுப்புது அப்டேட்டுகளில் விளம்பரங்களை பிளாக் செய்துவிடுகிறதாம்.

கூகுள் Duo அறிமுகம்...ஸ்கைப்புக்கு ஆப்பு?

Duo வீடியோ காலிங் அப்ளிகேஷனை அறிமுகம் செய்துள்ளது கூகுள். இன்னும் சில நாட்களில் உங்கள் ப்ளே ஸ்டோரில் Duo பதவிறக்கத்துக்கு தயாராக இருக்கும். இதன் 'Knock Knock' வசதி மூலம், வீடியோ காலில் அழைப்பவரை, அட்டெண்ட் செய்வதற்கு முன்பே பார்க்கலாம். கால் கட் ஆகாமலேயே, வை-ஃபை, மொபைல் டேட்டா இரண்டுக்கும் மாறக்கூடிய வசதி உள்ளது. 

பேஸ்புக்கின் புதிய தொழில்நுட்பம் அகுய்லா

மிகப்பெரிய சமூக வலைதலமான பேஸ்புக், இன்டர்நெட் மூலம் உலகை இணைக்கும் திட்டமான சூரிய சக்தி மூலம் இயங்கும் தனது ட்ரோன் ஆன 'அகுய்லா'வை தொடங்கியுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று தொடங்கப்பட்ட இந்த ட்ரோன் தான் உலகை முன்னேற்ற உதவும் முதன்மை இணைய அணுகலை கொண்டு முதல் முழு அளவிலான டிரோன் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


செப்டம்பர் முதல் டிசம்பர் வரை டெக் நிகழ்வுகள் நாளை...

-ஞா.சுதாகர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்