தமிழகத்தில் வோடஃபோன் 4ஜி சேவை அறிமுகம் 

vodafone 

 

வோடஃபோன், தனது 4ஜி சேவைகளை தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ளது. 


இந்தியா முழுக்க ஜியோ  4ஜி  வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வோடஃபோன்,  தனது  4ஜி சேவைகளை விரிவுப்படுத்தி வருகிறது. ஏற்கெனவே  கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், அசாம் மற்றும் டெல்லி, மும்பை,கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களிலும் வோடஃபோன்  4ஜி  சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 


தமிழகத்தில் முகற்கட்டமாக  'Vodafone Supernet 4G' என்ற பெயரில் புதிய சேவைகளை நேற்று கோவை, திருப்பூரில் மட்டும் அறிமுகம் செய்துள்ளது. தொடர்ந்து கோவா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2400 நகரங்கள் மற்றும் 17 வட்டாரங்களில் அடுத்த ஆண்டு (2017) மார்ச் மாதத்துக்குள்  4ஜி சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக வோடஃபோன் தெரிவித்துள்ளது.  அறிமுக சலுகையாக வாடிக்கையாளர்கள் அப்கிரேடு செய்யும் புதிய 4ஜி  சிம் கார்டுகளுடன்  அதிவேக 4G இன்டர்நெட் மற்றும் அனைத்து அப்கிரேடுகளுக்கும் 2 ஜிபி இலவச டேட்டாவும் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு மேலும் பல்வேறு புதிய சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!