இரண்டு செல்ஃபி கேமராவுடன் ’Vivo V5 Plus’

இரண்டு முன்புற கேமராவுடன் உருவாகியுள்ள வைவோ நிறுவனத்தின் Vivo V5 Plus  ஸ்மார்ட் போன் இந்தியாவில் ஜனவரி 23ம் தேதி  அறிமுகமாக உள்ளது.  வைவோவின் V5 ஸ்மார்ட் போன் கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் ரூ.17,980-க்கு அறிமுகமானது. தற்போது வெளியாகவுள்ள V5 Plus  முற்றிலும் வேறுப்பட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.  இரட்டை சிம் வசதி, வைவோ V5 Plus  இல் 5.5  இன்ச் திரையும் 3000Mah பேட்டரி சக்தியும்,  4GB  ரேம் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. எல்இடி ஃபிளாஷ் கொண்ட 13MP பின்புற கேமரா மற்றும்  20MP  முன்முற கேமரா கொண்டுள்ளது. இதன் விலை V5 போனை விட அதிகமாக இருக்குமாம்!
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!