வெளியிடப்பட்ட நேரம்: 11:24 (02/01/2017)

கடைசி தொடர்பு:11:58 (02/01/2017)

மீண்டும் வரும் நோக்கியா...மார்க்கெட்டை மீட்டெடுக்குமா?

மீண்டும் நோக்கியா

ரு காலத்தில் மொபைல் உலகை தனிக்காட்டு ராஜாவாக ஆட்சி செய்த நோக்கியா, ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஸ்மார்ட்போன்கள் வருகைக்கு பின்னர் இருந்த இடம் தெரியாமல் போனது. போனில் மட்டுமல்ல..வாழ்க்கையிலும் அப்டேட் என்பது எவ்வளவு முக்கியம் என்பதற்கு நோக்கியாவே சிறந்த உதாரணம் எனலாம். விரைவில் வீழ்ச்சியில் இருந்து மீண்டு எழுந்து, நோக்கியாவில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு 2014-ம் ஆண்டில் அதை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கிய செய்திதான் கடைசியில் கிடைத்தது. ஆனால் திடீரென கடந்த ஆண்டு மீண்டும் ஸ்மார்ட்போன் சந்தையில் நுழையப்போவதாக அறிவித்தது நோக்கியா. பின்லாந்தின் HMD Global நிறுவனம் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு நோக்கியா ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் உரிமத்தை பெற்றிருக்கிறது,

பிப்ரவரியில் நடக்கும் MWC நிகழ்ச்சியில் அனைத்து மொபைல் நிறுவனங்களும் தன்னுடைய புதிய ஸ்மார்ட்போன்களையும், தொழில்நுட்பங்களையும் அறிமுகப்படுத்தும். இந்த வருடம் MWC 2017 ல் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துகிறது நோக்கியா. அதில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கப் போகிறது என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் நோக்கியா ரசிகர்கள். மார்க்கெட்டில் பழைய ஃபார்முக்கு மீண்டும் திரும்ப வேண்டுமானால், தற்போதைய போட்டியாளார்களுக்கு சவால் அளிக்கும் விஷயங்களோடு, 'ஐ யம் பேக்' சொல்ல வேண்டும் நோக்கியா. அதை செய்யுமா?

நோக்கியா nokia

நோக்கியா ஸ்மார்ட்போன்களில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் :

ஒரு மிட்ரேஞ்ச், ஒரு ஹைரேஞ்ச் என இரண்டுமே ஸ்மார்ட்போன்களும் 4G-LTE வசதியை கொண்டிருக்கும்.

5 இஞ்ச் ஃபுல் HD டிஸ்ப்ளே, கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு Snapdragon 430 ப்ராசசர், 2 ஜி.பி ரேம்,16 ஜி.பி இன்டர்னல் மெமரி,13 மெகாபிக்சல் பின்பக்க கேமரா , 5 மெகா பிக்சல் முன்புற கேமரா ஆகியவை மிட்ரேஞ்ச் ஸ்மார்ட்போனில் எதிர்பர்க்கலாம்

5.5 இஞ்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே,கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு,1.4 GHz Snapdragon 430 Processor, 32 ஜிபி இன்டர்னல் மெமரி, ஃபிங்கர்பிரின்ட் சென்சார்,16 மெகாபிக்சல் பின்பக்க கேமரா, 8 மெகா பிக்சல் முன்பக்க கேமரா ஆகிய வசதிகளை ஹைரேஞ்ச் ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கலாம்

நோக்கியாவின் பலம் என்ன?

நோக்கியா nokia

ஏற்கெனவே நோக்கியா மக்களிடையே நல்ல மதிப்பை பெற்றுள்ளதால், அதிக விளம்பரம் எல்லாம் தேவையில்லை. 

நோக்கியாவின் அடுத்த பலம் அதன் சர்வீஸ் சென்டர்கள் மற்றும் அதன் சேவை.

நோக்கியா மொபைல்களின் கட்டுமானதரம்,பேட்டரிகளின் ஆயுள் அனைவரும் அறிந்ததே!

உலகின் பல இடங்களில் நோக்கியாவின் தயாரிப்பு தொழிற்சாலைகள் இருக்கின்றன. எனவே புதிதாக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த தேவையில்லை.

எனவே நோக்கியா புதிதாக களம் காணும் பேட்ஸ்மேன் போல இல்லாமல், தாரளமாக இறங்கி அடிக்க சாத்தியங்கள் அதிகம். எனவே பிப்ரவரியில் மீண்டும் நோக்கியாவின் 'அந்த கைகளிடம்' கை குலுக்க காத்திருக்கிறது டெக் உலகம். 

- மு.ராஜேஷ்
மாணவப் பத்திரிகையாளர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்