உங்களுடைய டவுன்லோடு ஹிஸ்டரியை யார் நினைத்தாலும் பார்க்க முடியும் #IKnowWhatYouDownload | This site can reveal your download history #IKnowWhatYouDownload

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (02/01/2017)

கடைசி தொடர்பு:11:40 (26/06/2018)

உங்களுடைய டவுன்லோடு ஹிஸ்டரியை யார் நினைத்தாலும் பார்க்க முடியும் #IKnowWhatYouDownload

டவுன்லோட் ஹிஸ்ட்ரி

சாதாரணமா பக்கத்துல இருக்குற ஒருத்தர் போன கொடுத்துட்டு போனாலே வாட்ஸ் அப் ஓப்பன் பண்ணி கேர்ள் ஃப்ரெண்டுக்கு அனுப்புன மெஸேஜ படிச்சுடுவாங்களோனு பயப்புடுறோம். நம்மளோட டவுன்லோட் ஹிஸ்ட்ரி ஒருத்தருக்கு தெரிஞ்சா? அப்படியே ஷாக் ஆக மாட்டோம். ஓசி வை-பைல படம் டவுன்லோட் பண்றது, ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ டோரன்ட்ல தான் பாப்பேன்னு அடம்பிடிக்குறவங்க எல்லாரும் கொஞ்சம் உஷாரா இருங்க. உங்களோட டவுன்லோட் ஹிஸ்ட்ரிய அசால்ட்டா எடுத்து காட்டுது iknowwhatyoudownload.com

ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒரு தனி IP Address கொடுக்கப்பட்டிருக்கும் அதை வைத்து தான் உங்களோட டவுன்லோட் ஹிஸ்ட்ரியா ஹேக் பண்ண முடியுமாம். இதன் மூலம் நீங்கள் பிட் டோரன்ட்டை பயன்படுத்தி டவுன்லோட் செய்யும் தரவுகளை எளிதில் பெற முடியும். என்ன டவுன்லோட் செய்தீர்கள் என்பதை அறிய முடியும். உங்கள் ஐ.பி அட்ரஸை இந்த தளத்தை திறந்தாலே எடுத்துவிடும் அளவுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.

 டவுன்லோட்  ஹிஸ்டரியை எப்படி பெறுவது?

உங்களுக்கு தேவைப்படுபவரின் IP Address தெரிந்தால் போதும் அவர் பிட் டோரன்ட்டில் டவுன்லோட் செய்த அனைத்து விவரங்களையும் பெற முடியும். உதாரணமாக ஒருவர் அலுவலகத்தில் எதாவது ஒரு படத்தை வேலைக்கு நடுவே டவுன்லோட் செய்கிறார் என்றால் எத்தனை மணிக்கு எந்த படத்தை எத்தனை மெமரியில் டவுன்லோட் செய்துள்ளார் என்பதை காட்டிவிடும்.

அவரது IP Address தெரியவில்லை என்றால் எதாவது ஒரு பாடல் அல்லது செய்தியின் லின்க்கை எடுங்கள். அதனை இந்த தளத்தில் உள்ள ட்ராக் IP Address  பகுதியில் ட்ரான்ஸ்ஃபார்ம் செய்யுங்கள். அது ஒரு சுருக்கப்பட்ட லின்க்கை தரும் அந்த லின்க்கை உங்கள் நண்பருக்கு அனுப்பி வைய்யுங்கள். அதன் மூலம் உங்கள் நண்பரது IP Address கிடைத்துவிடும்.

கிடைத்த IP Address மூலமாக பிட் டோரன்ட்டில் உங்கள் நண்பர் டவுன்லோட் செய்த படம், பாடல், வீடியோ என அனைத்து தகவலும் கிடைத்துவிடும். பிட் டோரன்ட் உங்கள் IP Address ஐ உங்களது ஒவ்வொரு டவுன்லோடுடன் மேட்ச் செய்து வைத்திருக்கும். அதன் மூலம் ஈஸியாக உங்களது டவுன்லோட் விவரங்களை அள்ளித்தருகிறது. 

டவுன்லோட் ஹிஸ்ட்ரி

என்ன ஆபத்து?

1. இந்த தளத்தில் இருந்து தரப்படும் லின்க் உங்கள் டவுன்லோட் ஹிஸ்டரியை தருகிறது என்றாலும் இவர்களும் ஹேக்கர்களே. மற்ற ஹேக்கர்களும் உங்கள் IP Address-க்குள் நுழைந்து உங்களது பர்சனல் தகவல்களை திருட வாய்ப்புள்ளது. 

2. டோரன்ட் டவுன்லோட் செய்திருந்தால் மட்டுமே உங்கள் டவுன்லோட் ஹிஸ்டரி தெரியும். ஆனால் உங்களது IP Address ஐ எந்த ரிஸ்க்கும் இல்லாமல் இந்த தளம் கொடுத்துவிடுகிறது. இதுவும் சற்று ஆபத்தானது தான்.

3. சிலரது வங்கி கணக்கு, பர்சனல் வீடியோக்கள் கூட இதன் மூலம் இழக்க வாய்ப்புள்ளது. 

தடுப்பது எப்படி?

நம்பகத்தன்மையான நபரிடம் இருந்து வந்தாலும் அவசரப்பட்டு க்ளிக் செய்யாதீர்கள் எந்த தகவலாக இருந்தாலும் அதிகாரப்பூர்வ தளத்தை அணுகி பெறுங்கள். ஒற்றை க்ளிக்கில் உங்கள் தகவல்களை இழக்காதீர்கள். டோரன்ட் போன்ற தளங்கள் மூலம் டவுன்லோட் செய்வதை தவிருங்கள். உங்கள் பர்சனல் பர்சனலாகவே இருக்கும்.

iknowwhatyoudownload.com இந்த தளம் ஒரு ஸ்பை தளமாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய டூல் உங்கள் மற்றும் உங்கள் நண்பரின் டவுன்லோட் ஹிஸ்டரியை வெளிச்சம் போட்டு காட்டிவிடும். பார்த்து உஷாரா இருங்க பாஸ்! VPN போன்றவற்றின் மூலம், இதில் இருந்து நீங்கள் உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

-ச.ஸ்ரீராம்

 


 


டிரெண்டிங் @ விகடன்