2016-ன் சிறந்த ஸ்மார்ட்போன் இதுதான்

91mobiles என்ற இணையதளம் நடத்திய கருத்துக்கணிப்பில் இந்த ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போனாக தேர்வு ஆகியிருக்கிறது Xiaomi Redmi Note 3. மொத்தம் பதிவான 30 ஆயிரம் வாக்குகளில் 21.8 சதவீதம் இந்த மாடலுக்கு ஆதரவாக விழுந்திருக்கின்றன. ஏற்கெனவே இந்தியாவின் பேவரைட் ஸ்மார்ட்போன், 2016-ல் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் என ஏராளமான பெருமைகளை பெற்றுள்ளது இந்த மொபைல் மாடல். ஆன்லைனில் வாங்கப்படும் போன்களில் ஒன்பதில் ஒன்று இந்த மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!