2015-ல் புத்தகம்... 2016-ல் ஓட்டம்... 2017-ல் என்ன செய்ய போகிறார் மார்க் ஸக்கர்பெர்க்..!? | Mark Zuckerberg's New year Resolution

வெளியிடப்பட்ட நேரம்: 13:39 (04/01/2017)

கடைசி தொடர்பு:17:24 (05/01/2017)

2015-ல் புத்தகம்... 2016-ல் ஓட்டம்... 2017-ல் என்ன செய்ய போகிறார் மார்க் ஸக்கர்பெர்க்..!?

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் நியூ இயர் ரெசல்யூஷன் எடுப்பவர்களுக்கு இன்ஸ்ப்ரேஷன். ரெசல்யூஷன் எடுத்தோம் ஒரு மாதம் ஃபாலோ செய்தோம் பின்னர் விட்டுவிட்டோம் என்று இல்லாமல் தொடர்ந்து செய்யவும் அதே ரெசல்யூஷனை ஃபாலோ செய்யும் ஒரு சமூகத்தை இணைப்பில் வைத்திருப்பதும் தான் மார்க் ஸக்கர்பெர்க்கின் ஸ்டைல்.

2015-ம் ஆண்டை இயர் ஆப் புக்ஸ் என்ற ரெசல்யூஷனோடு ஆரம்பித்த மார்க், வருடம் முழுவதும் இரண்டு வாரங்களுக்கு ஒரு புத்தகத்தை படிப்பேன் என்று சபதமெடுத்தார். அதேபோல் செய்து முடித்தார். 2016-ம் ஆண்டு என்ன செய்வார் என்று எதிர்பார்த்தபோது உலகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஓடினார். வருட இறுதியில் 365 மைல்கள் ஓடி முடித்திருக்க வேண்டும் என்பது தான் 2016 இயர் ஆஃப் ரன்னிங் ரெசல்யூஷன்.

மார்க் சக்கர்பெர்க்கின் இயர் ஆஃப் ரன்னிங்

வருடா வருடம் ரெசல்யூஷன்களில் தெறி காட்டிய மார்க். 2017ல் என்ன செய்யப்போகிறார் என்று டைம்லைனில் விழி வைத்துக் காத்திருந்த ரெசல்யூஷன் க்ரூப்பிற்கு இன்றைய ஸ்டேட்டஸ் மூலம் விடை தந்தார். அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் ''எல்லா வருடமும் ஒரு சவாலை முன் வைத்து துவங்குவேன். அதன் விளைவு தான் 365 மைல் ஓட்டம், ஜார்விஸ் மற்றும் 25 புத்தகம் படித்தது அனைத்துமே. 

ஜார்விஸ்

இந்த வருடத்துக்கான பர்சனல் சேலஞ்சாக நான் எடுத்திருப்பது. அமெரிக்காவில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் உள்ள மக்களை சந்திப்பது தான். ஏற்கெனவே இங்குள்ள மாகாணங்களில் பெரும்பாலானவற்றிலோ நான் அதிக நாட்களை செலவழித்துள்ளேன். அப்படிப் பார்த்தால் நான் இந்த வருடம் 30 மாகாணங்களுக்கு சென்று மக்களுடன் நேரத்தை செலவிட வேண்டியுள்ளது. 

நானும் என் மனைவி பிரிசில்லாவும் தரைவழி பயணங்களை மிகவும் ரசித்திருக்கிறோம். இப்போதும் அது தொடரும். சமீபத்தில் பல நாடுகளில் உள்ள மக்களை சந்தித்து அங்குள்ளவர்களுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டது மகிழ்ச்சி தருவதாக அமைந்தது. 

மாற்றத்துக்கு தயார் ஆகி வருகிறோம். இந்த வேளையில் தொழில்நுட்பம், உலகமயமாதல் ஆகியவற்றை செழுமைப்படுத்தி உலக மக்களை ஒன்றினைப்பது அவசியம். உலக மக்களுக்குள் இணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் ஃபேஸ்புக்கின் நோக்கம். ஃபேஸ்புக் மற்றும் சான்- ஸக்கர்பெர்க் இனிஷியேட்டிவ் மூலம் இந்த குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வோம். 

இந்த வருடம் எனது பயணங்கள் வித்தியாசமானதாக இருக்கும். சிறு நகரங்கள், பல்கலைகழகங்கள், ஆசிரியர்கள், சயிண்டிஸ்டுகள் மற்றும் மக்கள் பொழுதுபோக்குக்கு பயன்படுத்தும் இடங்கள் என்ற அடிப்படையில் இருக்கும். இந்த சவால் எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். இதில் மற்றவர்களும் எப்படி இணையலாம் என்று நாளைய பதிவில் குறிப்பிடுகிறேன் என்று கூறியுள்ளார். 

புத்தகம் படிப்பதற்காக 2015ல் ஒரு சமூகத்தை உருவாக்கினார். உடல் ஆரோக்கியம், ஃபிட்னெஸ் என தனிமனித கவனம் அதிகம் உள்ள ஒரு சமூகத்தை அமைத்து அதன் மூலம் உலகம் முழுவதும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். கட்டாயம் இந்த சேலஞ்ச் அமெரிக்காவுக்கான சேலஞ்சாக மட்டும் இருக்காது. உலகம் முழுவதும் மற்ற மக்களோடு தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்று மார்க் நினைத்தால் அதற்கு இந்த சேலஞ்ச் சரியானதாக அமையலாம். மார்க்கின் மந்திர வார்த்தையான 'கனெக்ட்' கனெக்ட்டாகுமா?

 

 

 

ச.ஸ்ரீராம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்