உலகின் முதல் 8GB ரேம் ஃபோன்..!

 

ஸ்மார்ட் ஃபோன் வரலாற்றில் முதல்முறையாக 8 GB ரேம் வசதி கொண்ட ZenFone AR ஃபோனை Asus நிறுவனம் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஃபோனில் 23 மெகா பிக்சல் பின்புற கேமரா, 5.7 இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே போன்ற இதர வசதிகளும் உள்ளன. இந்த ஃபோனில் பிரத்யேகமாக இருக்கும் வேப்பர் கூலிங் (Vapaour cooling) மூலம் ஃபோன் வெப்பமடைவதை தவிர்க்க முடியும் எனக் கூறுகிறது Asus நிறுவனம்.

2017- ம் ஆண்டில் 8 ஜிபி ரேம் வசதியை சாம்சங் ,HTC,,ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக வருடத்தின் தொடக்கத்திலேயே 8 ஜிபி ரேம் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது Asus நிறுவனம்.
Asus ZenFone AR என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்  Augmented reality (AR) , virtual reality (VR) ஆகியவற்றை மேம்படுத்த கூகுளால் உருவாக்கப்பட்ட டேங்கோ திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.

Asus ZenFone AR ன் சிறப்பம்சங்கள்:

5.7 இன்ச் Super AMOLED QHD (1440x2560 ) ஸ்கிரீன்,கொரில்லா கிளாஸ் 5 வசதி. 8 ஜிபி ரேம் வசதி ஸனாப்டிராகன் 821 பிராசசர் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் மெமரி.
 
23 மெகா பிக்சல் சோனி IMX318 பின்புற கேமரா, இது தவிர மேலும் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக 4K வீடியோவை பதிவு செய்யலாம் மேலும் மூன்று கேமரா வசதியை கொண்ட முதல் ஸ்மார்ட்போன் இதுதான். 13 மெகா பிக்சல் Sony IMX214 முன்புற கேமரா.முன்புற கேமராவுடன் சேர்த்து இதில் மொத்தம் நான்கு கேமராக்கள்.

ஆண்ட்ராய்டு 7.0 நௌளகட் இயங்குதளம். 5000mAh திறன்படைத்த பேட்டரி மற்றும் USB 3.1 type-C   சார்ஜிங் வசதி. இதன் எடை 170 கிராம் ,மற்றும் 7.9 மி.மீ தடிமன் அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போனை உபயோகிக்கும் போது உருவாகும் வெப்பத்தை குறைப்பதற்கு Vapor Cooling எனும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பயன்படுத்தப்படும் வாயு ஸ்மார்ட்போனின் வெப்பத்தை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் விற்பனைக்கு வரவுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை அறிவிக்கப்படவில்லை.

- மு.ராஜேஷ்
மாணவப்பத்திரிகையாளர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!