இனி வாட்ஸ்அப்பில் GIF அனுப்புவது ரொம்ப ஈஸி! #WhatsAppUpdate

வாட்ஸ்அப்

புதிய பீட்டா வெர்ஷனில், Gif அனுப்புவதை தற்போது மிக எளிதாக மாற்றியுள்ளது வாட்ஸ்அப். ஏற்கனவே Gif அனுப்பும் வசதி இருந்தாலும், அதனை தேடி அனுப்பும் வசதி கிடையாது. ஏற்கனவே போனில் இருக்கும் Gif ஃபைல்களை மட்டுமே அனுப்ப முடிந்தது. ஆனால் தற்போது Giphy மூலமாக, Gif-களை தேடும் வசதியையும் அறிமுகம் செய்துள்ளது. இது தற்போது வாட்ஸ்அப் பீட்டா பயனாளிகளுக்கு மட்டும்தான். விரைவில் அனைவருக்கும் இந்த வசதி வரும் என எதிர்பார்க்கலாம். 

Gif-களை தேடுவது எப்படி?

வாட்ஸ்அப் பீட்டா பயனாளர் இல்லையென்றால், நீங்கள் முதலில் பீட்டா டெஸ்ட்டராக பதிவு செய்துகொள்ள வேண்டும். பிறகு நீங்கள் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்தால், இந்த வசதி உங்களுக்கு கிடைக்கும். எப்போதும் டைப் செய்யும், டெக்ஸ்ட் பாக்ஸில் இருக்கும் இமோஜி குறியீட்டை தேர்வு செய்ய வேண்டும். பிறகு நீங்கள் வழக்கம் போல காணும், இமோஜிக்கள் தோன்றும். அதன் அருகிலேயே Gif என்னும் புதிய ஆப்ஷனும் இருக்கும்.

அதனை க்ளிக் செய்தால், ஏராளமான Gif-கள் உங்களுக்கு கிடைக்கும். அதில் இருந்து நீங்கள் Gif-களை தேர்வு செய்து அனுப்ப முடியும். இதுமட்டுமின்றி, குறிப்பிட்ட Gif-களை தேடவும் முடியும். அதற்கு 'சர்ச்' ஆப்ஷனும் இருக்கிறது. இதன் மூலம் உங்களுக்கு வேண்டிய Gif-களின் பெயரை டைப் செய்தாலே, அது தொடர்பான Gif-கள் கிடைக்கும். அப்படியே தேர்வு செய்து அனுப்ப முடியும். இதனால் மெசெஞ்சர், கூகுள் ஜிபோர்டு போல வாட்ஸ்அப்பிலும் Gif அனுப்புவது எளிதாகியுள்ளது.

Giphy

இனி 10 போட்டோதான் என்ற கட்டாயம் இல்லை!

அதேபோல இந்த பீட்டா வெர்ஷனில் மற்றொரு விதியும் தளர்த்தப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பில் ஒரே முறையில் மொத்தமாக 10 போட்டோக்கள் அல்லது வீடியோக்களைத் தான் அனுப்ப முடியும். அந்த எண்ணிக்கை இந்த முறை 30 ஆக மாற்றப்பட்டுள்ளது. எனவே இனி ஒரே தடவையில் 30 போட்டோக்களை அனுப்ப முடியும்.

எப்படி பீட்டா வெர்ஷன் அப்டேட் செய்வது?

கூகுள் ப்ளே ஸ்டோர் சென்று, வாட்ஸ்அப் பக்கத்திற்கு செல்லவும். அதன் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் “Became a beta tester” என்னும் ஆப்ஷனை தேர்வு செய்து, அதன் கீழே இருக்கும் I’M IN என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இதன் மூலம் நீங்கள் வாட்ஸ்அப்பின் பீட்டா பயனாளராக மாறிடலாம். 

இந்த வசதிக்கான பீட்டா வெர்ஷன்: 2.17.6

- ஞா.சுதாகர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!