வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (13/01/2017)

கடைசி தொடர்பு:15:40 (13/01/2017)

24 வயது பெண்ணை கூகுள் காப்பாற்றியது எப்படி?

கூகுள்

தரமணி படத்தோட பாட்டுக்கு நடுவுல யாருக்காவது தற்கொலை எண்ணம் வந்தா, 104 என்ற எண்ணுக்கு கால் பண்னுங்கனு ஒரு வாய்ஸ் வரும். பாட்டுக்கு நடுவுல மெஸேஜ் சொல்லக்கூடாதானு கேட்டுருப்பாங்க. அதே மாதிரி ஒரு வேலையைத்தான் கூகுளும் பார்த்திருக்கிறது. சஹரான்பூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள இடத்தில் 24 வயது இளம்பெண் காதல் தோல்வியால் யமுனையாற்றின் துணைப்பாலங்களில் ஒன்றில் விழுந்து தற்கொலைக்கு முயற்சி செய்ய நினைத்திருக்கிறார்.

ஆனால் கடைசி நேரத்தில் தற்கொலைக்கு மாற்று வழியை தேட முயற்சித்துள்ளார். அதற்காக அவர் உதவியை நாடியது கூகுள் தேடலைத்தான். கூகுளில்  ''how to commit suicide" என்று தேடியுள்ளார். அதற்கு கூகுள் அளித்த பதில் அவரது தற்கொலை எண்ணம் மாற காரணமாகியுள்ளது. கூகுள் தேடல் AASRA என்ற தற்கொலையிலிருந்து மீட்க உதவும் அமைப்பின் என்னை வழங்கியுள்ளது. அதன் மூலம் தனது தற்கொலை எண்ணத்தை மாற்றிக்கொண்டுள்ளார் அந்த பெண்.

இது குறித்து கூறிய அந்த பகுதியின் டிஐஜி ''ஒரு பப்ளிக் தொலைபேசி எண்ணிலிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அதன் எதிர்முனையில் ஒரு பெண் நடுக்கத்துடன் பேசினார். பின்னர் என் அலுவலகத்துக்கு வரவழைத்து பேசியதில் அவரது விவரத்தையும் கூறினார். ஒரு இளைஞனை காதலித்ததாகவும், அவனுக்கு அரசு வேலை கிடைத்துவிட்டது, அவர்கள் பெற்றோர் என் திருமணத்துக்கு மறுப்பு தெரிவிக்கிறார்கள் என்று கூறியுள்ளார். பின்னர் இருவரையும் அழைத்து கவுன்சிலிங் தர சொன்னதாகவும் டிஐஜி கூறியுளார்.

இந்த பெண்ணின் வாழ்க்கையை காப்பாற்றியது கூகுள் தேடல் தான். நாம் அனைத்துக்குமே கூகுளை தான் தேடுகிறோம். கூகுள் தேடலில் இது போன்ற சமூக அக்கறையுள்ள விஷயங்கள் இருப்பது ஆச்சர்யமளிப்பவையே. மேலும் இந்த விஷயத்தில் கூகுள் சிறப்பாக இயங்குகிறது. இதேபோல  “how to kill” என்று டைப் செய்தாலே அதன் பரிந்துரைகளாக கொசு, எலி, கரப்பான்பூச்சி என்ற பரிந்துரைகளையே முன்னிருத்துகிறது. 

மேலும் ஒருவர் “how to commit suicide” என தேடினால் அவரது பகுதியுடன் அங்குள்ள மீட்பு மையத்தின் உதவிமைய எண் அளிக்கப்படுகிறது. கூகுள் தேடல் 24 வய‌து பெண்ணின் உயிரை காப்பாற்றியுள்ளது. வெல்டன் கூகுள்...


ச.ஸ்ரீராம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்