ஆப்பிள் யூஸரா நீங்கள்? ஒரே ஒரு மெஸெஜ் உங்கள் மொபைலை க்ராஷ் செய்துவிடும்!

ஆப்பிள் யூஸரா நீங்கள்? ஒரே ஒரு டெக்ஸ்ட் மெசெஜ் உங்கள் மொபைலை க்ராஷ் செய்துவிடும் ஆபத்து இருக்கிறது.

ஆப்பிள்

ஐமெசேஜ் மூலமோ, குறுஞ்செய்தி மூலமாகவோ வரும் இந்த ஆபத்தை உருவாக்குவதும் எளிது. எந்த சாஃப்ட்வேர் அறிவும் இதற்கு தேவையில்லை என்பதுதான் ஆச்சர்ய அதிர்ச்சி. எமோஜி லிஸ்டில் இருக்கும் வெள்ளைக்கொடி, சீரோ மற்றும் ரெயின்போ எமோஜி ஆகியவற்றை வரிசையாக டைப் செய்து, எந்த ஆப்பிள் மொபைலுக்கும் அனுப்பினால் முடிந்தது கதை. அந்த மொபைல் க்ராஷ் ஆகிவிடுகிறது என சொல்கிறது, யூட்யூபில் இருக்கும் “EverythingApplePro" என்னும் சேனல்.

அந்த மெஸெஜை நாம் திறக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நோட்டிஃபிகேஷனும் வராது. அந்த மெஸெஜ் மொபைலுக்கு வந்த அடுத்த நொடி, ஆப்பிள் மொபைல் க்ராஷ் ஆகிவிடுகிறது. இதில் கொடுமை என்னவென்றால் சில ஆப்பிள் மாடல்களுக்கு இந்தப் பிரச்னைக்கு இன்னும் தீர்வு வரவில்லை.

ஐஓஎஸ் 8க்கு மேல் இருக்கும் ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்ட எல்லா ஆப்பிள் மொபைலும் இந்த பிரச்னைக்கு உள்ளாகிறது. இந்த வீடியோவை பாருங்கள்.

 

 

ஆப்பிள்இந்த மூன்று எமோஜிக்களையும் டைப் செய்து இன்னொரு ஆப்பிள் மொபைலுக்கு அனுப்புகிறார். மெஸெஜ் வந்து சேர்ந்த நோட்டிஃபிகேஷன் சத்தம் கேட்ட அடுத்த நொடி, மொபைல் க்ராஷ் ஆகிறது. அதுவரை நன்றாக வேலை செய்துகொண்டிருந்த மொபைல், எந்த ரியாக்‌ஷனும் இல்லாமல் போய்விடுகிறது. 

இரண்டு வழிகளில் இந்த பிரச்னை அனுப்பப்படலாம். ஒன்று, ஐமெசெஜில் மூன்று எமொஜிக்களையும் வரிசையாக டைப் செய்து அனுப்புவது. இரண்டாவது வழியில், இந்த எமோஜிக்களை காண்டாக்ட் ஃபைலாக மாற்றி ஐகிளவுட் மூலம் ஷேர் செய்வது. இரண்டிலும் மொபைல் க்ராஷ் ஆகிவிடுகிறது. 10 நிமிடங்களுக்கு பிறகு தானாக மொபைல் ரீஸ்டார்ட் ஆகி சரியாகிவிடுகிறது.

ஏன்?
எப்படி இது நடக்கிறது என்பதற்கான சரியான காரணத்தை ஆப்பிள் இன்னும் சொல்லவில்லை. மூன்று எமோஜிக்களையும் டெக்ஸ்ட்டாக மாற்றும் வேலையை பேக்கிரவுண்டில் ஆப்பிள் செய்கிறது. அதில் இருக்கும் சிரமம் காரணமாக மொபைல் ஹேங் ஆகலாம் என்கிறது இந்த சேனல். ஐமெசெஜ் மூலம் நடக்கும் க்ராஷுக்கு ஆப்பிள் சொல்யூஷன் வைத்திருக்கிறது.

காண்டாக்ட் ஃபைலாக வந்தால் அவ்வளவுதான். மொபைலுக்கு காண்டாக் ஃபைல் வந்ததும், அந்த யூஸர் அதைத் திறக்க முயற்சி செய்வார். அப்போது அதில் இருக்கும் தகவலை மொபைல் டீகோட் செய்ய முயற்சிக்கும். இந்த மூன்று எமோஜிக்கள் பதுக்கி வைத்திருக்கும் டேட்டாவின் அளவு அதிகம். அதை டீகோட் செய்ய முடியாமல் மொபைல் தினறும். அதனால், உடனே ஹேங் ஆகிவிடும். அந்த அப்ளிகேஷனை மூடிவிட்டால் மொபைல் சரியாகிவிடும். ஆனால், மீண்டும் மெஸெஜ் ஆப்பை திறக்கும் போது முந்தைய மெஸெஜ்களை மொபைல் படிக்க நேரிடும். அதனால், மீண்டும் ஃப்ரீஸ் ஆகிவிடும்.

மொபைலுக்கு எதுவும் ஆகிவிடாது என்றாலும், அடுத்த சில நிமிடங்களுக்கு மொபைல் ஹேங் ஆகிவிடும் என்பதே ஆப்பிள் பயனர்களை பதற வைக்கிறது.  

-கே

Do you like the story?

Please Appreciate the Author by clapping!