வெளியிடப்பட்ட நேரம்: 07:58 (24/01/2017)

கடைசி தொடர்பு:12:28 (24/01/2017)

“தனியா இருக்கேன்.. வீட்டுக்குப் போகணும்.!" - வேலையை விட்ட ஜியோமியின் துணைத்தலைவர்

ஜியோமி

ஜியோமி  தனது புதிய தயாரிப்பான ஜியோமி நோட் 4 ஸ்மார்ட்போனை விற்பனைக்கு கொண்டுவந்துதுள்ளது. விற்பனைக்கு வந்த 3 நிமிடத்தில் ஃப்ளிப்கார்ட் தளத்தில் விற்று தீர்ந்தது. இந்த செய்தி வைரலாகி முடிப்பதற்குள் அதன் துணைத்தலைவர் ஹூகோ பாரா தனது பதவியை விட்டு விலகுவதாக தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

ஜியோமியின் சர்தேச தலைவரான ஹூகோ பாரா கூறியிருப்பதாவது ''எம்.ஐ ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி, இங்கு 3.5 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். சரியாக 4 வருடங்களுக்கு முன்னால் லெய் ஜுன் மற்றும் பின் லின் ஆகிய இருவரும் ஒரு ஸ்டார்ட் அப்பை சர்வதேச நிறுவனமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் என்னை அணுகினார்கள். அவர்களது திட்டத்தை கேட்டு நான் சிலிக்கான் வேலியிலிருந்து 6500 மைல்கள் தாண்டியுள்ள பீஜிங்கிற்கு குடிபெயர்ந்தேன். ஜியோமி தான் எனது முதல் திட்டம் நான் உலகிற்கு கொண்டு  வந்த முதல் தயாரிப்பு.

ஆனால் சமீபகாலமாக சில வருடங்களாகவே நான் தனிமையில் இருப்பதாக உணர்கிறேன். என்னோடு யாருமே இல்லாதது போன்ற உணர்வு. என் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்ப‌டுத்தியதோடு, என் உடல் நிலையையும் பாதித்துள்ளது. நான் எனது வீட்டிற்கே திரும்ப உள்ளேன். சிலிக்கான் வேலிக்கு திரும்ப இதுவே சரியான நேரம்.

 

 

ஜியோமியின் நல்ல முன்னேற்றத்தில் பங்குவகித்தது மகிழ்ச்சியளிக்கிறது. எங்களது கனவுகளில் ஒன்று இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தகத்தை அமைப்பது. இந்தியாவில் ஒரு பில்லியன் டாலர் ஆண்டு வருமாணத்தை ஈட்டியது பெருமைப்படும் விஷயங்களில் ஒன்று. நான் ஜியோமியின் நிறுவனர்களுக்கு நன்றியை கூறி கொள்கிறேன். குறிப்பாக சிஇஓ லெய் ஜுன்னுக்கு நன்றி. அவர் எனக்கு ஒரு சிறந்த மெண்டாராக இருந்துள்ளார். சீனாவின் டெக்னாலஜி உலக நாடுகளில் மேலோங்கி இருக்க வேண்டும் என்பதில் ஜியோமியின் பங்களிப்பு அதிகம். அவர்கள் என்னை நிரந்தர ஆலோசகராக இருக்க சொல்லி கேட்டார்கள் 

நான் பிப்ரவரி மாதம்தான் சிலிக்கான் வேலி செல்ல உள்ளேன். எனக்கு முடிவெடுப்பதற்கு சிறிதுகாலம் தேவைப்படுகிறது. இந்தியா மற்றும் சீனாவில் உள்ள அனைத்து எம்.ஐ ரசிகர்களுக்கும் நன்றி. நான் என்றுமே எம்.ஐயின் ரசிகனாக உங்கள் மனதில் இடம்பிடிக்க விரும்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.

24 நாடுகளில் ஜியோமியை விரிவுபடுத்திய ஹூகோ பாரா, கூகுளில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி மாதம் பணியை விட்டு விலகவுள்ளதாக அறிவித்துள்ள ஹூகோ பாரா தனது புதிய பணி குறித்த தகவல் எதையும் வெளியிடவில்லை. 
 

ச.ஸ்ரீராம்


டிரெண்டிங் @ விகடன்