வெளியிடப்பட்ட நேரம்: 17:52 (25/01/2017)

கடைசி தொடர்பு:17:51 (25/01/2017)

500 கோடிக்கு மேல் இழந்த ஏர்டெல்... ஜியோ காரணமா?

ஜியோ,ஏர்டெல்

ஜியோவின் அதிரடி ஆஃபர்களால் அதிர்ந்து போயிருக்கிறது ஏர்டெல். ஏற்கனவே தனது டேட்டா கட்டணங்களை ஏர்டெல் குறைத்தது. இப்போது, அதன் காலாண்டு நிதிநிலைமையின்படி 54% லாபத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதால் ஏர்டெல் நிறுவனம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

டிசம்பர் 2016ல் முடியும் காலாண்டு ரிப்போர்ட்டை வெளியிட்டிருக்கிறது ஏர்டெல். அதன்படி ஏர்டெல்லின் நிகர லாபம் 504 கோடி ரூபாய். கடந்த நான்கு ஆண்டுகளில் ஏர்டெல்லின் குறைவான லாபம் 2016ல் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 2015-ம் ஆண்டு இதே சமயத்தில் அதன் நிகர லாபம் 1108 கோடியாக இருந்தது. 

பொருளாதார வல்லுநர்களின் கணிப்புப்படி ஏர்டெல் நிறுவனம் 1087 கோடி ரூபாய் லாபம் ஈட்டும் என கூறப்பட்டது. ஆனால், ஏர்டெல் நிறுவனம் 504 கோடி ரூபாய் தான் லாபம் ஈட்டியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது 4ஜி சேவைகளை ஆரம்பித்தது. இலவசமான 4ஜி சேவை என்பதால், பொதுமக்கள் மத்தியில் ஜியோவுக்கு ஆதரவு பெருகியது. ” ‘இலவசம்’ என்பது சரியல்ல. அது தொலைதொடர்புதுறை சந்தையையே அழித்துவிடும்” என அப்போதே ஏர்டெல்லின் மிட்டல் சொன்னார். “மற்ற டெலிகாம் ஆப்ரேட்டர்களோடு ஒப்பிட்டால், ஏர்டெல் தான் குறைவான சேதாரத்தை சந்தித்திருக்கிறது. இருந்தாலும், இலவசமாக ஒரு சேவை வழங்குவதை நாங்கள் ஆதரிக்க மாட்டோம். அது அனைத்து நிறுவனங்களின் பொருளாதாரத்தை அசைத்துவிடும்” என்றார் மிட்டல்.

ஏர்டெல்லின் இந்த நஷ்டத்திற்கு ஜியோ மட்டுமே காரணம் இல்ல. உயர்பண மதிப்பிழப்பும் முக்கியம் காரணம் என்கிறார்கள் வல்லுநர்கள். இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 86% ரூபாய் தாள்கள் இதனால் செல்லாமல் போனது.அதனால் நுகர்வோர்கள் கையில் பணப்புழக்கம் குறைந்தது.அதுவும் இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம்.

பாரதி நிறுவனம் ஆப்பிரிக்க நாடுகளிலும் இயங்கி வருகிறது. அங்கும் நைஜீரிய நாட்டில் பண மதிப்பிழப்பு உத்தரவு காரணமாக நஷ்டத்தை சந்தித்திருக்கிறது. 

இன்னும் ஒரு வாரத்தில் இந்தியாவின் இன்னொரு முக்கியமான டெலிகாம் நிறுவனமான ஐடியாவின் காலாண்டு ரிப்போர்ட் வரவிருக்கிறது. சென்ற காலாண்டிலே 88% வீழ்ச்சியை ஐடியா சந்தித்திருந்தது. இந்த முறை அது இன்னும் மோசமாகும் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

ரிலையன்ஸ் ஜியோ தந்த இலவச சேவை மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் மார்ச் 31க்குப் பிறகு தனது வாடிக்கையாளர்களுக்கான சேவை பற்றிய திட்டங்களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது..
ஏர்டெல் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சலுகைகளை வெளியிட்டுள்ளது. இதன் ஒப்பீடு இதோ...

ஏர்டெல் ஜியோ ஒப்பீடு

-கே

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்