வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (25/01/2017)

கடைசி தொடர்பு:18:59 (25/01/2017)

கம்ப்யூட்டர் கீ-போர்டில் கெத்து காட்ட 13 ட்ரிக்ஸ்!

கம்ப்யூட்டர்

கம்ப்யூட்டர் அப்படிங்குற விஷயம்  இன்னிக்கு ஓரளவுக்கு எல்லார் வீட்லயும் இருக்குற விஷயமா மாறிடுச்சு. அதுலயும் இன்னிக்கு இருக்குற  யூத்கள் அதுல மவுஸ்னு ஒரு விஷயத்த‌ ஏன் கண்டுபுடிச்சாங்கனு கேக்குற அளவுக்கு கீ-போர்ட் ஷார்ட்கட்லயே  கெத்து காட்டுறாங்க. வாட்ஸ் அப், யூ-ட்யூப்க்கு எப்படி விதவிதமான ட்ரிக்ஸ் இருக்கோ அதேமாதிரி   கம்ப்யூட்டர்ல கீ-போர்டு  மூலமா கெத்து காட்டுற 13 ட்ரிக்ஸ் இதோ...

1.ப்ரின்ட் ஸ்க்ரீன்னு ஒரு கீ இருக்கும் அத பயன்படுத்தினா மொத்த சிஸ்டம் ஸ்க்ரீனும் காப்பி ஆகும். ஆனா Alt+Print Screen பயன்படுத்தினா பர்ஃபெக்ட் ஸ்க்ரீன் காப்பி ஆகும்.

2. Alt+Tab ஒரு விண்டோவிலிருந்து இன்னோரு விண்டோவுக்கு செல்ல உதவும்

3. Ctrl+Tab ப்ரெளசரின் ஒரு டேப்பிலிருந்து இன்னோரு டேப்புக்கு செல்ல உதவும்.

4. டாஸ்க் மேனேஜருக்கு Ctrl+Shift+Esc -ஐ அழுத்தவும்

5. சில பக்கங்களை சேமித்து வைக்க Ctrl+D-ஐ அழுத்தினால் புக் மார்க் ஆகிவிடும்

6. நீங்கள் எழுதிய டாக்குமெண்ட்டில் உள்ள வார்த்தை பிழைகளை அறிய F7 ஐ அழுத்தினால் போதும். 

7. யூ-ட்யூப் வீடியோ ப்ளே ஆகும் போது 'J' மற்றும்  'L' கீ மூலம் ஃபாஸ்ட் ஃபார்வர்டு செய்ய முடியும். 'K' மூலம் வீடியோவை பாதியில் நிறுத்த முடியும்.

8. Windows Key+Enter அழுத்தினால் கணினியை பின் தொடர வைக்கும் வாய்ஸ் நரேட்டர் ஓப்பன் ஆகும்.

9.இணையதளங்களின் பெயரை மட்டும் டைப் செய்து  Ctrl+Enter ப்ரஸ் செய்தால் 'www.' & '.com' தானாகவே சேர்ந்துவிடும்.

10. ஒரு ஃபைலில் செலக்ட் செய்யப்பட்ட வார்த்தையை ஹப்பர்லின்க் ஆக்க Ctrl+K ப்ரஸ் செய்தால் போதும். 

11. Shift+F3 மூலம்  எழுத்துக்களை கேப்பிட்டல்  மற்றும் ஸ்மால் எழுத்துக்களுக்கு மாற்ற முடியும்.

12. Windows Key+L கீயை அழுத்தினால் நீங்கள் உங்கள் கணினியை லாக் செய்து வைக்க முடியும்.

13. Windows key-ஐ அழுத்தி  U வை இரண்டு முறை அழுத்தினால் உங்கள் கணினி ஆஃப் ஆகும்.

என்ன பாஸ் இதுக்கெல்லாம் மவுஸ் வேணுமா? அப்பறம் என்ன இனிமே நீங்களும் கெத்து காட்டுங்க...

ச.ஸ்ரீராம்


டிரெண்டிங் @ விகடன்