ஹேக்கர்களிடம் இருந்து உங்களைப் பாதுகாப்பதற்கான 10 வழிகள் #BewareOfHackers | How to protect yourself from hacking #BewareOfHackers

வெளியிடப்பட்ட நேரம்: 20:38 (30/01/2017)

கடைசி தொடர்பு:20:38 (30/01/2017)

ஹேக்கர்களிடம் இருந்து உங்களைப் பாதுகாப்பதற்கான 10 வழிகள் #BewareOfHackers

ஹேக்கர்ஸ் hackers

லகம் முழுவதுமே இணையமயமாக மாறி வருகிறது. இதில் எந்தளவு நல்வினைகள் உண்டோ அந்தளவிற்கு தீவினைகளும் உண்டாகின்றன என்பது நிதர்சனம். அது போல இணையத்தை நல்ல முறையில் உபயோகிப்போரும் உண்டு; அதைத் தவறாகப் பயன்படுத்துவோரும் உண்டு. அவ்வாறு தவறாக இணையத்தைப் பயன்படுத்துகின்ற ஹேக்கர்ஸ் என்றழைக்கப்படுகின்ற ஊடுருவாளர்கள் உலகம் முழுவதுமே பெருகி வருகின்றனர். இவர்களிடம் இருந்து தப்பிக்கவும், உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் 10 வழிகள் இதோ...

1. Firewall-ஐ எப்போதும் ஆன் செய்த நிலையிலேயே வைத்திருக்க வேண்டும். நமது வீட்டின் கதைவைப் பூட்டி வைப்பது எந்தளவு பாதுகாப்பானதோ அதுபோல இந்த தீச்சுவரை செயல்நிலையில் வைத்திருத்தல் என்பது நமது கணினி மற்றும் கடவுச்சொற்களை ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாக்க உதவும்.

2. Virtual private Network என்று சொல்லப்படுகின்ற சுய இணையப் பிணைப்புடன் தகவல்களைப் புரட்ட வேண்டும். இது இணையத்திற்கும் கணினிக்கும் இடையிலான மறையாக்கமாக செயல்படுவதால் உங்களது கோப்புகளை ஊடுருவுதல் கடினமாக்கப்படும்.

3. பொது இடங்களில் கிடைக்கின்ற public wifi இணைப்பைப் பயன்படுத்தாது இருத்தல் நல்லது. ஒருவேளை அவசரத் தேவைக்காக அதனைப் பயனிக்க நேர்ந்தால் குறைவான நேரத்தைக் கொண்டு உபயோகித்தல் நல்லது .ஏனெனில் இந்த Public Wifi நமது பொறியின் கோப்புகளைக் கடத்த ஏதுவாக அமையுமென்பதால் இதில் எச்சரிக்கையோடு செயல்படுதல் நன்று. பப்ளிக் வைஃபைகளை பயன்படுத்தும் போது, எந்த காரணம் கொண்டு, உங்கள் வங்கி தகவல்கள், பாஸ்வேர்டுகள் போன்றவற்றை உள்ளீடு செய்ய வேண்டாம். இவை எளிதாக திருடப்பட வாய்ப்புண்டு.

4. உங்களது Hotspot -ஐ கடவுச்சொல் கொடுத்து பயன்படுத்த வேண்டும். 

ஹேக்கர்ஸ்

5. மின்னஞ்சல், முகநூல், ட்விட்டர் போன்ற உங்களது இணைய முகவரிகளுக்கு சவாலான கடவுச்சொல்லை உபயோகித்தல் அவசியம்.கடவுச்சொல் 8 எழுத்துகளுக்கு மேல் இருத்தல் நன்று. மேலும் பெயர், பிறந்த தேதி, நண்பர் பெயர் போன்றவற்றைக் கடவுச்சொல்லாகப் பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும்.எண்களும் எழுத்துகளும் கலந்த வண்ணம் அவை அமைய வேண்டும். ஒரே பாஸ்வேர்டுகளை அனைத்து அக்கவுன்ட்களுக்கும் பயன்படுத்த வேண்டாம்.

6. இரண்டு உறுதிச் செயல்பாடுகளைப் பயன்படுத்த வேண்டும்.அதாவது Two step authentication. உதாரணமாக, கூகுளின் இணைய சேவைகளுள் ஒன்றான gmail-ஐ எடுத்துக் கொள்வோம். நமக்கு வந்த மெயிலைக் காண இருவேறு பாதுகாப்பு முறைகளை நாம் கையாள வேண்டும். இந்த வசதி மூலம், உங்கள் பாஸ்வேர்டு, மொபைல் இரண்டும் இருந்தால் மட்டுமே உங்கள் கணக்குகளை திறக்க முடியும். பிஷ்ஷிங் தாக்குதல்கள் போன்றவற்றை தடுக்க இது உதவும்.

7. கணிணியில் அமைந்துள்ள மென்பொருள்களை அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும்.அப்பொழுதுதான் ஊடுருவாளர்களிடமிருந்து நாம்சார்ந்த தகவல்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். எனவே கணினியைத் தானாகவே அப்டேட் செய்து கொள்ளும் நிலையில் வைத்திருக்க வேண்டும். 

8. ஒரு மென்பொருளைத் தரவிறக்கம் செய்யும்பொழுது எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். ஹேக்கர்களிடமிருந்து வரும் லிங்குகளை நாம் தரவிறக்கினால் வைரஸ் போன்றவையும் உள்நுழையும் ஆபத்து உண்டு. எனவே நம்பிக்கையற்ற லிங்குகளில் இருந்து தரவிறக்கம் செய்ய வேண்டாம்.

9. Antivirus மென்பொருள்களைப் பயன்படுத்தல் அவசியம். இவற்றுள் இலவசமானதும் உண்டு; விலை மதிப்புடையதும் உண்டு. 

10. உபயோகிக்காத நிலையில் கணினியை ஆஃப் செய்து விடுங்கள். 

                                                                              - பா.பிரியதர்ஷினி

மாணவப் பத்திரிகையாளர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close