கோலி, ஃபெடரர், நடால், பூம்ராஹ், சிந்து... சண்டே கில்லி யார் தெரியுமா?

கோலி, ஃபெடரர், நடால், பூம்ராஹ், சிந்து

இந்தியா மட்டுமல்ல, உலகமே நேற்று ஸ்போர்ட்ஸ் சேனல்களில் தான் மூழ்கி இருக்கும். காரணம் நேற்று நடந்த விளையாட்டு போட்டிகள் எல்லாமே பார்ப்பவரை சீட்டின் நுனிக்கு கொண்டுவரும் ஆட்டங்கள். ஒரு பக்கம் நடால், ஃபெடரர் மோதிய ஆஸ்திரேலியன் ஓப்பன் ஆட்டம், இன்னொரு பக்கம் பி.வி.சிந்து மோதிய சையது மோடி பேட்மின்டன் கோப்பை இறுதி போட்டி, இறுதியாக கடைசி பந்து வரை சுவாரஸ்யமாக நடந்த இந்தியா - இங்கிலாந்து இடையேயான டி20 போட்டி.

இந்தியா விளையாட்டு போட்டிகளுக்கான சொர்க்கபூமி என்பது அனைவரும் அறிந்ததே. சில நாடுகளில் ஒரு குறிப்பிட்ட விளையாட்டுக்கு தான் அதிக ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால் இந்தியாவில் எல்லா விளையாட்டுகளுக்குமே அதிக அளவில் ரசிகர்கள் இருப்பார்கள் என்பது நேற்றைய ட்ரெண்டிங் நிரூபித்துள்ளது. இந்தியா- இங்கிலாந்து டி20 போட்டி தான் நேற்றைய வைரலாக இருக்கும் என்றால் எல்லாவற்றையும் மீறி நடால்- ஃபெடரர் ஆட்டம் டாப் ட்ரெண்டிங்கில் இருந்தது.

கோலி,  நெஹ்ரா

ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டம் வென்ற ஃபெடரரை தான் இந்தியா அதிகம் தேடியுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது நடால். இவர்களுக்கு பிறகு தான் இந்திய கேப்டன் கோலி மற்றும் இறுதி கட்ட ஓவர்களில் சிறப்பாக பந்து வீசிய பூம்ராஹ் ஆகியோரை தேடியுள்ளது. இதில் மேலும் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில் இந்திய கேப்டன் விராட் கோலியை அவரது பேட்டிங் மற்றும் கேப்டன்ஸிக்காக தேடியதை விட கோலி பள்ளியில் படிக்கும் போது சிறப்பு விருந்தினராக வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா வந்து பரிசளித்த புகைப்படத்தை தான் அதிகமாக தேடியுள்ளனர். இன்று நெஹ்ரா கோலியின் தலைமையின் கீழ் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய நாளின் இறுதியில் ஃபெடரர், நடால், கோலி, சிந்துவை தாண்டி தனது துல்லியமான பந்து வீச்சால் இந்தியா ட்ரெண்டில் முதலிடம் பிடித்து அசத்தினார் பூம்ராஹ். ஆக மொத்தத்தில் நேற்றைய சூப்பர் ஸ்போர்ட்ஸ் சண்டேயின் கில்லிகள் ஃபெடரரும், பூம்ராஹ்வும் தான்.

கோலி, ஃபெடரர், நடால், பூம்ராஹ், சிந்து யார் கெத்து?

 

ரபேல் நடால்

ரோஜர் ஃபெடரர்

விராட் கோலி

பி.வி.சிந்து

ஜஸ்ப்ரீத் பூம்ராஹ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!