நெடுஞ்சாலைகளில் விபத்துகளைத் தவிர்க்கும் புது யுக்தி..! அரசின் கவனத்துக்கு #WOWengineering | Life-saving Rolling barrier system

வெளியிடப்பட்ட நேரம்: 10:22 (01/02/2017)

கடைசி தொடர்பு:12:47 (01/02/2017)

நெடுஞ்சாலைகளில் விபத்துகளைத் தவிர்க்கும் புது யுக்தி..! அரசின் கவனத்துக்கு #WOWengineering

சாலை

உலக சுகாதார நிறுவனம் (WHO) சொல்லும் கணக்குப்படி, ஆண்டுக்கு 12.5 லட்சம் மக்கள் சாலை விபத்துகளால் உயிர் இழக்கின்றனர். இதில் பெரும்பாலான விபத்துகள், நெடுஞ்சாலையில் வேகமாகச் செல்லும் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியோ, சாலையில் இருந்து கீழிறங்கிக் கவிழ்ந்தோதான் நடக்கின்றன. உலகம் முழுவதுமே பல நாடுகள், நிறுவனங்கள் இத்தகையை விபத்துகளைத் தடுப்பது பற்றியும், பாதுகாப்பை உறுதிசெய்யும் நடவடிக்கைகள் பற்றியும் வேலை செய்துவருகின்றன. அந்த வகையில், கொரியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, ஒரு தற்காப்பு சிஸ்டத்தை உருவாக்கியிருக்கிறது.

இந்த சிஸ்டம் மூலம், வேகமாக வந்து சாலையில் இருந்து கவிழும் வாகனங்களைத் தடுத்து, வாகனத்தின் வேகத்தைக் குறைத்து, மீண்டும் சாலைக்குள்ளே திருப்பிவிடும். ரோலிங் பேரியர் சிஸ்டம் எனினும் இதன் மூலம் 100% சேதத்தைத் தவிர்க்க முடியாது. ஆனால், உயிரிழப்புகளைக் கணிசமாகக் குறைக்கலாம் என்கிறது ETI என்னும் இதன் தயாரிப்பு நிறுவனம்.

 

 

 

Rolling barrier system எப்படிச் செயல்படுகிறது?

ரோலிங் பேரியர் சிஸ்டத்தில் வரிசையாக ரோலர்கள் இருக்கின்றன. இதன்மீது வேகமாக வரும் வாகனம் மோதும்போது impact energy உருவாகிறது. இதை ரோலர்கள் வாங்கி, rotational energy ஆக மாற்றுகின்றன. அதாவது, வாகனம் மோதுவதால் அதிலிருக்கும் ரோலர்கள் சுழல ஆரம்பிக்கின்றன. அதனால், வாகனத்தின் வேகம் குறைகிறது. மீண்டும் வாகனம், எதிர்த்திசையில் உந்தப்பட்டு, சாலைக்குள் திரும்புகிறது. ரோலரின் மேலும், கீழும் இருக்கும் ரயில்கள், வாகனத்தின் டயரை திசை திருப்ப உதவுகின்றன. இந்த ரயிலிலும் இரண்டு அடுக்குகள் இருக்கின்றன. முதல் லேயரின் மீது வாகனம் முதலில் மோதும். அப்போதே அதன் வேகம் குறையும். அதன் பின் இரண்டாவது அடுக்கின் மீது மோதும். இப்படி படிப்படியாக வாகனத்தின் சுமையைத் தாங்கி, வாகனம் கவிழ்வதில் இருந்து தடுக்கின்றன. 

இந்த ரோலர்கள் EVA எனப்படும் பொருளால் செய்யப்பட்டிருக்கிறது. இதன் ஷாக் அப்சார்பிங் திறன், வழக்கமான பிளாஸ்டிக் ரோலர்களை விட மிக அதிகம். இந்த ரோலர்களைத் தாங்கியிருக்கும் Buffering frames-ம் உறுதியானவை. ஒவ்வொரு ரோலர் மீதும் வெளிச்சம் பட்டதும் ரிஃப்ளெக்ட் செய்யும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. அதனால், இரவு நேரத்தில்  ஓட்டுநரின் பார்வையில் இருந்து ரோலர்கள் தப்பாது.

EVA ரோலர்களின் நெகிழ்வுத்தன்மை (elasticity) அதிகம். எனவே, விரைவில் உடையாது. ஒவ்வொரு ரோலரும் தனித்தனியாக அட்டாச் செய்திருப்பதால், விபத்தின்போது சேதாரம் ஆகும் ரோலர்களை மட்டும் மாற்றினால் போதும். எனவே, பரமாரிப்புச் செலவும் குறைவு.

 

 

எந்த ஒரு விபத்தில் இருந்தும் பாதுகாக்க முனைவதை விட, விபத்தே நடக்காமல் இருக்க யோசிப்பதுதான் சிறந்த பாதுகாப்புத் திட்டமாக இருக்க முடியும். அதற்கு, வாகனம் ஓட்டும் ஒவ்வொருவரும் பொறுப்புடன், கவனமாக செயல்படுவதே ஒரே தீர்வு. அதையும் மீறி நடக்கும் விபத்துகளை இதுபோன்ற முயற்சிகள் மூலம் தடுக்கலாம். ஆனால், நிரந்தரத் தீர்வு என்பது நம் ஒவ்வொருவரின் கைகளிலும்தான் இருக்கின்றன. கவனமாக ஓட்டுவோம். 

Happy driving.

-கார்க்கிபவா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close