வெளியிடப்பட்ட நேரம்: 20:56 (02/02/2017)

கடைசி தொடர்பு:20:58 (02/02/2017)

ஃபேஸ்புக்ல இன்னைக்கு ஏன் Friends Day வீடியோ வருது? #FriendsDay

ஃபேஸ்புக் friend's day video

ன்னைக்கு காலையில் இருந்து ஃபேஸ்புக் ஓப்பன் பண்ண எல்லாருக்குமே ஒரு சின்ன ஜெர்க் இருந்திருக்கும். அதற்கு காரணம் உங்கள் டைம்லைனில் திடீரென வந்துவிழுந்த Friends Day வீடியோக்கள்தான். 'எந்த தினம் வந்தாலும் வாட்ஸ்அப்பில் நாலு நாளைக்கு முன்னாடியே ஃபார்வர்டு மெசேஜ் அனுப்பிருவோமே...இதை எப்படி மிஸ் பண்ணோம்...இன்னைக்கு ஃப்ரெண்ட்ஷிப் டே இல்லவே இல்லையே...?' என நாம் யோசித்தால், 'அட...அதைத்தான் நானும் சொல்ற...இன்னைக்கு ஃபிரண்ட்ஷிப் டே இல்லை; அதுக்காக ஃப்ரெண்ட்ஸ மறந்துட முடியுமா?' என கில்லி விஜய் ஸ்டைலில் பதில் சொல்கிறது ஃபேஸ்புக்.

மார்க் சக்கர்பெர்க்

ஆமாம் பாஸ்...நிஜமாலுமே இன்னைக்கு ஃபிரண்ட்ஷிப் டே இல்லை. ஆனால் ஃபிரண்ட்ஸ் டே (என்ன குழப்புதா? ஃபேஸ்புக் இப்படித்தான் சொல்லுது!).  ஃபேஸ்புக் தனது பிறந்தநாளான பிப்ரவரி மாதம் 4-ம் தேதியை 'Friends Day' என சொல்லி கொண்டாடி வருகிறது. 2015-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், இது தொடர்பாக தனது  பக்கத்தில், ஒரு ஸ்டேட்டஸ் பதிவிட்டிருந்தார். அதில் "இந்த நாள் நண்பர்களை கொண்டாட வேண்டிய நாள். அதுமட்டுமின்றி இன்று ஃபேஸ்புக்கின் பிறந்தநாளும் கூட. ஆனால் நீங்கள் ஃபேஸ்புக்கை கொண்டாட வேண்டாம். நட்பை கொண்டாடுவோம். இன்றைய தினத்தில் நண்பனைக் கொண்டாடுவோம்" என அதில் கூறியிருந்தார். அப்போது அந்த ஸ்டேட்டஸில் மார்க் அறிமுகம் செய்ததுதான் இந்த friends day.

 

அதன்பின்பு 2016-ம் ஆண்டும் இதேபோல பிப்ரவரி மாதம் 4-ம் தேதியும் நண்பர்கள் தினம் பற்றி ஸ்டேட்டஸ் போட்டவர், அத்துடன் நண்பர்கள் பற்றிய ஒரு குட்டி வீடியோ ஒன்றையும் சேர்ந்து பகிரும் ஆப்ஷனையும் அறிவித்தார்.

 

 

இதுபோன்ற தனிப்பட்ட முறையிலான வீடியோக்கள் ஃபேஸ்புக்கில் புதிதல்ல. உங்களின் பிறந்தநாள், ஃபேஸ்புக்கில் நீங்கள் இணைந்த நாள் என அடிக்கடி ஏதாவது ஒரு வடிவத்தில் இப்படி வீடியோக்கள் வந்து கொண்டே இருக்கும். அதுபோலவே இந்த ஆண்டும் ஃபிரண்ட்ஸ் டே-க்காக வீடியோ ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது ஃபேஸ்புக்.

'சரிதான்...ஆனால் இன்னைக்குதான் ஃபிப்ரவரி 4-ம் தேதி இல்லையே...?' எனக் கேட்கிறீர்களா? ஆமாம் பாஸ்...கரெக்ட்டுதான். இந்த வாரத்தின் சனிக்கிழமைதான் ஃபேஸ்புக்கின் 13-வது பிறந்தநாள். ஆனால் இந்தமுறை முன்கூட்டியே, அதைக் கொண்டாடுவதற்காக இந்த ஏற்பாட்டை செய்துள்ளது ஃபேஸ்புக். 

வீடியோவை எப்படி பார்ப்பது?

 இந்த வீடியோவை உங்கள் நியூஸ் ஃபீடிலேயே காண முடியும். அல்லது உங்கள் நண்பர்களின் ஃபிரண்ட்ஸ் டே வீடியோவை பார்க்கும் போது, அதற்கு கீழே இருக்கும் Watch yours என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தும் உங்களுக்கான friends Day வீடியோவை பார்க்க முடியும். இன்னும் எளிதாக பார்க்க ஒரே வழி, https://www.facebook.com/friendsday என்கிற முகவரிக்கு சென்று பார்க்கலாம். இதில் உங்களுக்கான Friends Day வீடியோவை பார்த்து ஷேர் செய்யலாம். உங்களுக்கான வீடியோவில் ஏதேனும் சில மொமென்ட்ஸ் அல்லது நண்பர்களின் முகங்கள் உறுத்தலாக இருந்தால், அதனை எடிட் செய்வதன் மூலமாக நீக்கி விடலாம்.

friends day சிறப்பு gif வசதி

இந்த வீடியோ வசதி மட்டுமின்றி, நீங்கள் மெசெஞ்சரில் சாட் செய்யும் போது, ஃபிரண்ட்ஸ் டே பற்றிய Gif-களையும் ஹைலைட் செய்து காட்டுகிறது ஃபேஸ்புக்.

- ஞா.சுதாகர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்