வெளியிடப்பட்ட நேரம்: 06:46 (03/02/2017)

கடைசி தொடர்பு:14:59 (03/02/2017)

அடுத்த தலைமுறை கணினி தகவல்தொடர்பு பாதுகாப்புக்கவசம் ரெடி!

லிபோர்னியாவின் ஆன்டாரியோ சர்வதேச விமான நிலையத்தில் 'குவான்டம் கிரிப்டோகிராஃபி'  எனப்படும் அடுத்த தலைமுறை தகவல் தொடர்பு பாதுகாப்பு முறை குறித்த சோதனை நடைபெற்றது. வாட்டர்லூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பௌவ் என்ற இயற்பியல் விஞ்ஞானி, விமானம் மூலமாக இந்த சோதனையில் ஈடுபட்டார். சென்டர் மற்றும் ரிசீவர் ஆஃப்டிகள் ஃபைபர் கேபிள் மூலமாக நடத்தப்படும் இந்த சோதனையை விஞ்ஞானிகள் ஏற்கெனவே, அதிவேகமாக நகரும் செயற்கைக்கோளில் செய்து பார்த்துவிட்டனர். இப்போது இரண்டாம் கட்டமாக விமானத்தில் சோதனை செய்து பார்க்கின்றனர். இது வெற்றி பெற்றால், 'ஹாக்கிங்' எனப்படும் இணைய தகவல் திருட்டு, சைபர் கிரைம் ஆகியவை சுத்தமாக இல்லாமல் போய்விடும். ஆன்லைன் பணப்பரிவர்த்தனை உலகம் முழுக்க அதிகரிக்கும். ஏற்கெனவே கிரிப்டோகிராஃபி  சில இடங்களில் பயன்பாட்டில் உல்ல நிலையில், அதன் அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியான 'குவான்டம் கிரிப்டோகிராஃபி' இன்னும் பல சாதனைகளைப் படைக்கும் என விஞ்ஞானிகள் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க