வெளியிடப்பட்ட நேரம்: 06:31 (06/02/2017)

கடைசி தொடர்பு:06:23 (06/02/2017)

IMDB-யில் 'மெஸேஜ் போர்ட்' வசதி நிறுத்தம்

சினிமா தகவல் களஞ்சியமான IMDB, அமேசான் நிறுவனத்திற்குச் சொந்தமானது. திரைப்படங்கள் குறித்த தகவல்களை அறிய உலகம் முழுவதும் உள்ள பலரால் இந்தத் தளம் பயன்படுத்தப்படுகிறது. இதில் தனது பயனர்கள் படங்களைப் பற்றி விவாதித்துக் கொள்ள மெஸேஜ் போர்ட் என்ற வசதியை IMDB தந்திருந்தது. ஆனால் இதில் பெரும்பாலும் தனிமனிதத் தாக்குதல்களும், அவதூறான தகவல்களும் மலிந்து கிடந்தது.

IMDB

இந்நிலையில், பலருக்கும் உபயோகமாக இல்லாத காரணத்தினாலும், தற்போதைய காலகட்டத்தில் மெஸேஜ் போர்ட் அவசியமில்லை எனக் கருதுவதாலும் அந்த வசதியை வருகின்ற 20-ம் தேதியில் இருந்து நிறுத்திக் கொள்வதாக IMDB தெரிவித்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க