வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (07/02/2017)

கடைசி தொடர்பு:12:59 (07/02/2017)

மொபைல்ல யூடியூப் பார்ப்பீங்களா? உங்களுக்குதான் இந்த புது வசதி!

யூடியூப்
 

மொபைலில் யூடியூப் பார்க்கும் ஆளா நீங்கள்? நமக்காகவே ஒரு ‘நச்’ வசதியை தந்திருக்கிறது யூடியூப்.

லேப்டாப் /கணினி போல மொபைலில் யூடியூப் வீடியோக்களை நகர்த்தி நகர்த்தி பார்ப்பது எளிதான விஷயம் இல்லை. ஸ்க்ரோல் பார் சிறியதாக இருப்பதால், 10 செகண்ட் தாண்ட நினைத்து இழுத்தால், அது 10 நிமிடம் தாண்டி போய்விடும். ஸ்டாப்பிங்கில் நிற்காத மாநகர பேருந்துகளை போலதான் யூடியூபும் தொல்லை கொடுக்கும்.பலர் மொபைலை ஒற்றைக்கையில் ஹேண்டில் செய்வதால், இன்னும் சிக்கல். அதுவும் மொபைல் டேட்டாவில் இருப்பவர்களுக்கும் நேரத்தோடு சேர்ந்து டேட்டாவும் தீரும். 

இந்த பிரச்னைகளை பல பேர் ட்விட்டர், ஃபேஸ்புக் என அவ்வப்போது எழுதிக்கொண்டுதான் இருந்தார்கள். அவர்களின் குரல் கடைசியாக யூடியூபின் காதுகளுக்கு எட்டிவிட்டது. புதிய அப்டேட்படி, ஸ்க்ரினின் இடதுபக்கம் இரண்டு முறை டேப்(Tap) செய்தால், 10 செகண்ட் ரீவைண்ட் ஆகி வீடியோ ஓடும். ஸ்க்ரினின் வலதுபக்கம் இரண்டு முறை டேப் செய்தால் 10 செகண்ட் ஃபார்வார்டு ஆகி ஓடும். ஒரு கையில் மொபைல் வைத்துக்கொண்டு பயன்படுத்துபவர்களுக்கு கூட இந்த வசதி எளிமையான ஒன்றாக இருக்கிறது.

இந்த புதிய யூடியூப் அப்டேட் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் இயங்குதளத்துக்கு வந்துவிட்டது. ஆனால், ஒரே சமயத்தில் அனைவருக்கும் கொடுக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக இன்ஸ்டால்மெண்ட்டில் அப்டேட்டை யூஸர்களுக்கு கொடுத்து வருகிறது யூடியூப்.

யூடியூபில் இன்னும் ஏராளமான ஆச்சர்ய ட்ரிக்ஸ் உண்டு. அதையெல்லாம் அதிகமானோர் பயன்படுத்துவது கிடையாது. அதில் சில டிப்ஸ் அண்ட் ட்ரிக்ஸ் உங்களுக்காக...

பாடல் கேட்க மட்டும் யூட்யூப் பயன்படுத்தலாம்:

listentoyoutube.com என்ற இணையதளத்தில் நீங்கள் வீடியோவாக அல்லாமல் mp3-யாக கேட்க நினைக்கும் லின்க்கை அளித்தால் போதும் உங்கள் யூடியூப் வீடியோவை mp3யாக மாற்றித்தரும்.

டாகி ஸ்டைல்:

யூடியூப் சர்ச் பார்ல ''Doge Meme''னு டைப் பண்ணுங்க உங்க யூடியூப் முழுவது வண்ணமயமா மாறிடும். எல்லாம் எழுத்துக்களும் கலர்ஃபுல் ஃபாண்ட்ல தெறி காட்டும்.

dog meme

ரிப்பீட்டா கேட்போம்:

ஒரே ஒரு பாட்ட ரிப்பீட் மோட்ல கேக்கணும்னு நெனைச்சா நேரடியா ஆப்ஷன் எங்க இருக்குனு தேடிகிட்டே இருப்போம். ஆனா ரைட் க்ளிக் பண்ணி ''Loop'' கொடுத்தா போதும்ங்கறது பல பேருக்கு தெரியாத விஷயம். அப்படி இல்லன்னா listenonrepeat.com ங்கிற இணையதளத்துல யூடியூப் லின்க் பேஸ்ட் பண்ணி ரிப்பீட் மோட் என்ஜாய் பண்ணலாம்.

விஷுவல் மாற்றம்:

youtube

யூடியூப் பக்கம் கசங்கிய பேப்பர் போல காட்சியளிக்க வேண்டும். அப்படியே வீடியோக்களையும் ரசிக்க வேண்டும் என்றால் use the force luke என யூடியூப் சர்ச்சில் டைப் செய்யுங்கள்...உங்க யூடியூப் பக்கம் கசங்கி இருக்கா?

ஆட வைக்கலாம் வாங்க:

do the harlem shake என யூடியூப்பில் டைப் செய்தால் குறிப்பிட்ட நேரத்துக்கு யூடியூப் பக்கம் ஷேக் ஆவதை உங்களால் பார்க்க முடியும்.

-கார்க்கிபவா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்