மோடியின் டிஜிட்டல் இந்தியாவை விமர்சனம் செய்கிறாரா மார்க் சக்கர்பெர்க்? | Is Mark Zuckerberg criticizing Modi's Digital India Scheme

வெளியிடப்பட்ட நேரம்: 16:31 (09/02/2017)

கடைசி தொடர்பு:16:31 (09/02/2017)

மோடியின் டிஜிட்டல் இந்தியாவை விமர்சனம் செய்கிறாரா மார்க் சக்கர்பெர்க்?

மார்க் சக்கர்பெர்க்

ஃபேஸ்புக் சிஇஓ மார்க் சக்கர்பெர்க் தான் சொல்ல வரும் கருத்தை குறியீடாகச் சொல்வதை வழக்கமாக வைத்திருப்பவர். ஃபேஸ்புக்கின் ஒரு சாதனையை பெருமிதமாக தனது ஸ்டேட்டஸ் மூலம் பதிவு செய்த மார்க் சக்கர்பெர்க் அதில் பதிவிட்டிருந்த புகைப்படத்தின் மூலம் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை மறைமுகமாகக் கிண்டல் செய்துள்ளார்.

தனது பதிவில் நாங்கள் ஃபேஸ்புக்கை குறைந்த இணைய வேகம் உள்ள பகுதிகளுக்காக லைட் வெர்ஷனாகத் தயாரித்துள்ளோம். இப்போது இதனை 200 மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் குறைவான இணைய வேகம் கொண்ட மக்களையும் உலகத்தோடு இணைக்க முடிகிறது. இந்த நாளை மகிழ்ச்சியோடு துவங்கியுள்ளேன் என ஸ்டேட்டஸ் தட்டியிருக்கிறார்.

இதில் அவர் ஃபேஸ்புக் லைட் வெர்ஷன் தொடர்பான செல்போன் போன்ற படத்தை பதிவிட்டிருக்கிறார். அதில் ஒருவரது ஃபேஸ்புக் கணக்கும் அவர் இந்தியாவின் செங்கோட்டை பின்னணியில் இருப்பது போன்ற புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. இணைய வேகம் குறைவான மக்களுக்கான சேவையைப் பற்றிப் பேசும் மார்க் இந்தியாவின் புகைப்படத்தைப் பதிவு செய்து, இந்தியாவை இணைய வேகம் குறைவான நாடாக சித்திரித்துள்ளார். மேலும் அந்தப் புகைப்படத்தின் பின்னணி நாட்டின் தலைநகராக இருக்கும் டெல்லியைப் குறிப்பது இந்தியாவின் தலைநகரில்கூட இணைய வேகம் அவ்வளவு வேகமாக இல்லை என்பதை உணர்த்தும் விதமாக உள்ளது.

 

 

சென்ற வருடம் மோடியுடனான சந்திப்பு டிஜிட்டல் இந்தியா என இந்தியாவின் பெருமை பேசி வந்தார் மார்க். ஃபேஸ்புக்கின் ஃப்ரீ பேசிக்ஸ் சேவையை இந்தியா புறக்கணித்தது.அதற்கு வெளிப்படையாகவே தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார் மார்க். அதிலிருந்து இந்தியாவைப் புகழும் பதிவுகளை அவரது டைம்லைனில் காண முடிவதில்லை. இந்நிலையில் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு கூகுள் போன்ற நிறுவனங்கள் உதவி வருகின்றன. இருந்தாலும் இந்தியா இன்னும் இணைய வேகமில்லா நாடுதான் என்பதை குறியீடாக விமர்சிக்கிறாரா மார்க் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

இதேபோல்தான் அமெரிக்க தேர்தல் முடிவுகளின் போது ட்ரம்ப்பை மறைமுகமாக விமர்சித்த மார்க் தற்போது குடியேறுதல் தொடர்பான பிரச்னையில் நேரடியாக தாக்கினார். ஃபேஸ்புக் தனி ஆளுமையாக வளர்வதால் மார்க் இது போன்ற விமர்சனங்களை தைரியமாக முன் வைத்து வருகிறார். இந்தியா ஃபேஸ்புக்கின் மிகப்பெரிய சந்தை என்பதால் மார்க் நேரடி விமர்சனங்களை முன்வைக்கத் தயங்குவார். 

ச.ஸ்ரீராம்


டிரெண்டிங் @ விகடன்