சம்பளமும் கொடுத்து அதிக விடுமுறையும் அளிக்கும் கம்பெனி இதாங்க! | Famous tech firm reveals its paid leave details for employees

வெளியிடப்பட்ட நேரம்: 12:14 (11/02/2017)

கடைசி தொடர்பு:12:13 (11/02/2017)

சம்பளமும் கொடுத்து அதிக விடுமுறையும் அளிக்கும் கம்பெனி இதாங்க!

ஸ்ரெயல் சான்ட்பெர்க் சம்பளத்துடன் கூடிய விடுமுறை தினங்களை வெளியிட்டுள்ளார்

ஒவ்வொரு வருடமும் அலுவலகம் தனி நபருக்கான விடுமுறை நாட்களுக்கான அளவுகளை அறிவிக்கும். அப்படிப்பட்ட அறிவிப்பில் அதிக நாட்கள் விடுப்பு எடுத்து கொள்ளலாம் என்றால் எவ்வளவு ஹேப்பியாக இருப்போம். அப்படிப்பட்ட ஒரு சந்தோஷத்தில்தான் இருக்கிறார்கள் ஃபேஸ்புக் பணியாளர்கள். சமூக வலைதளங்களில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் ஃபேஸ்புக் தனது ஊழியர்களுக்கான சம்பளத்துடன் கூடிய விடுமுறை தினங்களை அறிவித்துள்ளது.

2017ம் ஆண்டின் மேக்கர்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட பேஸ்புக் நிறுவனத்தின் சி.ஒ.ஒ. ஸ்ரெயல் சான்ட்பெர்க் ,பேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குடும்பத்தில் நிகழும் இறப்புக்கான விடுப்பு நாட்களை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்திலும் தகவல் வெளியிட்டுள்ளார். தற்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்பின்படி இந்த ஆண்டு ஜனவரி 1க்கு பிறகு நிறுவன ஊழியர்கள் தங்கள் சொந்த குடும்பத்துக்குள் நிகழும் மரண நிகழ்வுகளுக்கு 20 நாட்கள்வரை விடுப்பு எடுத்து கொள்ளலாம். அதே போல் உறவினர்கள் வீட்டு இறப்புகளுக்கு 10 நாட்கள்வரை விடுப்பு எடுத்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்.

 

 

 

மேலும், இந்த புதிய அறிவிப்பின்படி ஊழியர்கள் தன்கள் சொந்த குடும்ப உறுப்பினர்களுள் யாராவது நீண்ட நாட்கள் நோய்வாய்ப்பட்டு இருந்தால் அவர்களை கவனித்து கொள்ள 6 வாரங்கள் வரை விடுப்பு எடுக்கவும், சிறிய அளவிலான உடல்நலக்குறைவுகளுக்கு 3 நாட்களும் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.

இதுபோக ஏற்க்கனவே, ஃபேஸ்புக் ஊழியர்கள் யாருக்காவது குழந்தை பிறந்தால் அவர்கள் நான்கு மாதங்கள்வரை சம்பளத்துடன் கூடிய விடுமுறை பெறலாம். மேலும் மனைவி கர்ப்பமாக இருக்கும் காலத்தில் கணவர்களுக்கும் சிறப்பு விடுமுறைகள் உண்டு. அதேபோல் ஆண்டுக்கு 21 நாட்கள் மருத்துவ விடுப்பும் எடுத்து கொள்ள வசதிகள் உண்டு.

பணியாளர்கள்தான் நிறுவனத்தின் மிகப்பெரிய சொத்து. அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் விடுமுறை அளிப்பது நிறுவனத்தின் கடமை. அமெரிக்காவில் முன்பு 10ல் 9 பெண்களுக்கு குடும்ப விடுப்புகள் அளிக்கப்படாமல் இருந்தது. அவர்கள் ஆன்களை போன்றே 80 சதவிகிதம் உழைக்கிறார்கள். இன்னும் நாட்டில் சம்பளத்துடன் கூடிய தேசிய விடுமுறைகள் இல்லை. நிறுவனங்கள் இதனை பின்பற்ற வேண்டும். இது பணியாளர்களுக்கு நன்மை பயக்கும் என்றார்.

இன்னோரு ஆச்சர்யமான தகவல் என்னெவென்றால் கூகுள்தான் உலகில் பணியாளர்கள் உற்சாகமாக பணிபுரியும் நிறுவனமாக இருந்து வருகிறது. ஃபேஸ்புக் அந்த இடத்தை மெல்ல மெல்ல தட்டி பறித்து வருகிறது. அமெரிக்காவில் குடியுரிமை பிரச்னை காரணமாக பணியாளர்கள் பாதிக்கப்படும் அபாயம் இருந்த போதும் முதலில் குரல் எழுப்பியது ஃபேஸ்புக் தான்.  மார்க் நீங்க வேற லெவல் பாஸ் என மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் ஃபேஸ்புக் நிர்வாகிகள். 

ரா.கலைச்செல்வன் (மாணவப் பத்திரிகையாளர்) 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்